வலிமை முதல் எதற்கும் துணிந்தவன் வரை 2022ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்கள்
கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு, தமிழ் சினிமா மீண்டும் வழக்கம் போல் இயங்க துவங்கிய ஆண்டு 2022. மூன்று மாதங்களை கொடுத்துள்ள தமிழ் சினிமாவில் இதுவரை ஓடிடி மற்றும் திரையரங்கதில் வெளிவந்ததை சேர்த்து மொத்தம் 37 படங்கள் வெளியாகியுள்ளது. இதிலிருந்து சிறந்த படங்கள் என்னென்னெ என்பதை தான், நாம் தற்போது பார்க்க போகிறோம்..
கடைசி விவசாயி
எம். மணிகண்டன் இயக்கத்தில் நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகி பாபு நடிப்பில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் கடைசி விவசாயி. விவசாயத்தையும், விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும், விவசாயியை பற்றியும் எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றியடைந்தது. ஆண்டவன் கட்டளை, காக்கா முட்டை படங்களை தொடர்ந்து எம். மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம், பார்ப்போரை மைசீலர்க்க வைத்தது. படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு வசனமும் நம்மை பார்த்து கேள்வி கேட்கும் அளவிற்கும் எழுதியிருக்கிறார் மணிகண்டன். படத்தில் அவர் வைத்திருந்த பல காட்சிகள் இப்படியெல்லாம் கூட ஒருவரால் யோசிக்க முடியமா என்று நமக்கு தோன்றியது. இப்படிப்பட்ட ஒரு திரைப்படம் பல ஆண்டுகள் கழித்து, பல பிரச்சனைகளை கடந்து வெளிவந்தது கொஞ்சம் சோகம் தான்.
வலிமை
AK அஜித் குமாரின் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் கடந்த 24ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளிவந்த திரைப்படம் வலிமை. மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையில் வெளிவந்த இப்படம் வசூல் ரீதியாக சிறந்த வரவேற்பை பெற்றிருந்தாலும், விமர்சன ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்கவில்லை. ஏனென்றால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பே, இப்படத்திற்கு பலவீனமாக அமைந்துவிட்டது. ஆனாலும், இயக்குனர் எச். வினோத் தனது இயக்கமும், திலிப் சுப்ராயனின் ஸ்டண்ட், நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் படத்தை வெற்றி பாதைக்கு எடுத்து சென்றது.
எப்.ஐ.ஆர்
விஷ்ணு விஷால் தயாரித்து, நடித்து வெளிவந்த படம் எப்.ஐ.ஆர். மனு ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில், கௌதம் வாசுதேவ் மேனன், ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். வேலை தேடி வரும் விஷ்ணு விஷாலுக்கு போகும் இடம்மெல்லாம், தான் ஒரு முஸ்லீம் என்பதினால் நிராகரிக்க போடும் விஷ்ணு விஷலுக்கு, தன்னை இஸ்லாமியராக தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நபர்கள் மீதி கோபம் ஏற்படுகிறது.
NIA உள்ளிட்ட பல இந்திய காவல் துறையை சேர்ந்த பலரும், தேடி வரும் .அபூபக்கர் அப்துல்லா இந்திய நாட்டில் வெடிகுண்டு மிரட்டல்களை விடுகிறார். தீடீரென எதிர்பாராமல் நடக்கும் பல சம்பவங்கள், விஷ்ணு விஷாலின் பக்கம் எதிராக திரும்ப, விஷ்ணு விஷால் தான் அபூபக்கர் அப்துல்லா என்று NIA முடிவுசெய்து அவரை கைது செய்கிறார்கள். இதன்பின் என்ன நடந்து என்ற கதை தான் எப்.ஐ.ஆர். ராட்சசன் படத்திற்கு பின் இப்படம் தான், விஷ்ணு விஷாலுக்கு ரீ என்ட்ரியாக அமைந்தது.
முதல் நீ முடிவும் நீ
தர்புகா சிவா இயக்கத்தில் முதன் முதலில் வெளிவந்த திரைப்படம் 'முதல் நீ முடிவும் நீ'. பள்ளி பருவ காதல், நட்பு, பிரிவு, கோபம், வன்மம், என அனைத்தையும் அழகாக எடுத்துக்காட்டியிருந்தார் தர்புகா சிவா. நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்திருந்தாலும், இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வெற்றியடைந்துள்ளது. படத்தில் நடித்திருந்த ஒவ்வொருவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருந்தனர். குறிப்பாக இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் பி.ஜி.எம் அனைத்தும் நம் மனதை கவர்ந்திருந்தது.
சில நேரங்களில் சில மனிதர்கள்
நாசர், அசோக் செல்வன், மணிகண்டன், ரித்விகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க விஷால் வெங்கட் இப்படத்தை இயக்கியிருந்தார். எதிர்ச்சியாக நடக்கும் ஒரு செயலில் ஒருவருக்கு ஒருவர் எப்படி பின்னிப்பிணைந்து இருக்கிறோம் என்பதை, சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்தில் விஷால் வெங்கட் அழகாக எடுத்துக்காட்டியிருந்தார். திரையரங்கில் வெளிவந்த இப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும், நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மக்களை நம் கண் முன் நிறுத்தியது. ஏன், நாம் கூட சில நேரங்களில் இப்படி இருத்திருக்கிறோமே என்று நம்மையே நமக்கு நினைவுபடுத்தியது.
வீரமே வாகை சூடும்
காவல் துறையில் இணையவேண்டும் என்று துடிப்புடன் இருக்கும் விஷால், அநீதி நடப்பதை பார்த்தல் உடனடியாக கோபப்படுகிறார். வில்லன் பாபுராஜ் நடத்தி வரும் தொழிற்ச்சாலையை எதிர்த்து 'பரிசுத்தம்' என்பவர் புரட்சி செய்து வருகிறார். பரிசுத்தத்தை, போரஸ் கொலை செய்கிறார். இந்த கொலையை பார்க்கும், விஷுலின் தங்கையை கொலை செய்யும் வில்லனை இறுதியில் விஷால் என்ன செய்தார் என்பதே படத்தின் கதை..
து.பா. சரவணா என்பவர் இயக்கியிருந்த இப்படம் கலவனையான விமர்சனங்களை பெற்றாலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைக்கதையில் கொஞ்சம் சொதப்பல் செய்த காரணமாகவே இப்படத்தை பார்ப்பவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டது. ஆனாலும், கதைக்களமும், ஒளிப்பதிவும், ஸ்டண்ட் காட்சிகளும் படத்தில் சூப்பராக அமைந்திருந்தது.
எதற்கும் துணிந்தவன்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூர்யா நடிப்பில் இரண்டரை ஆண்டுகள் கழித்து திரையரங்கில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கத்தில், முழு கிராமத்து கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை விஷயங்களை எதிர்க்கும் விதத்தில் இப்படத்தை இயக்கியிருந்தார் பாண்டிராஜ். சூர்யாவின் துணிச்சலான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்தாலும், ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு எதிர்க்கும் துணிந்தவன் அமையவில்லை. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பின்னடைவை சந்தித்தது இப்படம்.
மகான்
கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் முதன் முறையாக விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்து நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த திரைப்படம் மகான். பாபி சிம்ஹா, சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் ஓடிடி-யில் வெளிவந்திருந்தாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. இருந்தாலும் கூட, விக்ரமின் மாசான நடிப்பு, கார்த்திக் சுப்ராஜின் வழக்கமான கேங்கேஸ்டர் இயக்கமும் ரசிகர்களை ஈர்த்தது. அதே போல் சந்தோஷ் நாராயணனின் இசையும், பின்னணி இசையும் படத்திற்கு மாபெரும் பலமாக அமைந்தது.
இதுவரை கடந்த 3 மாதங்களில் வெளிவந்த தமிழ் படங்களை மட்டுமே வைத்து இந்த லிஸ்ட் தயார்செய்யப்பட்டுள்ளது. விரைவில் வெளிவரவிருக்கும் படங்களை வைத்து லிஸ்ட் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட் டீசரில் விஜய் எப்படி இருப்பார் தெரியுமா? நடிகர் வெளியிட்ட தகவல்