நெட்பிலிக்ஸில் தவறவிடக்கூடாத சிறந்த தமிழ் படங்கள்!
நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் நீங்கள் மிஸ் செய்ய கூடாத சில தமிழ் படங்களின் தொகுப்பு. இதுவரை பார்க்கவில்லை என்றால் பார்த்துடுங்க.
மெஹந்தி சர்க்கஸ்
கொடைக்கானலில் கேசட் கடை வைத்திருக்கும் ஹீரோ, அங்கு வந்து சர்க்கஸ் போடும் மும்பையை சேர்ந்த க்ரூபில் இருக்கும் மெஹந்தி உடன் அவர் காதலில் விழுகிறார். பெண்ணை ஹீரோவுக்கு கொடுக்க ஒரு பெரிய கண்டிஷன் போடுகிறார் அவரது அப்பா.
கேசட் கடை வைத்து நடத்திக்கொண்டிருக்கும் ஒரு நபர் சர்க்கஸ் சாகசம் செய்வாரா? அதுவும் தனது காதலி உயிரை பணயம் வைத்து.. என்பது தான் இந்த படத்தின் கதை.

மெட்ரோ
சமுதாயத்தில் அவமானத்தை சந்திக்கும் ஒருவன் பணத்தாசையில் செயின் பறிப்பில் இறங்குவது, இந்த கிரைம் பின்னணியில் எவ்வளவு பெரிய வேலைகள் எல்லாம் நடக்கிறது என்பது தான் இந்த படத்தின் கதை.
இளைஞர்களை தவறான திசையில் வழிநடத்தும் என்பதால் இந்த படத்தை டிவியில் கூட இன்னும் யாரும் ஒளிபரப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கதையை பார்த்து தான் அஜித்தின் வலிமை எடுத்திருப்பதாக மெட்ரோ பட தயாரிப்பாளர் ஹெச்.வினோத் மீது வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் டீலக்ஸ்
இந்த சமுதாயத்தில் பெண்கள், திருநங்கைகள் என பல தரப்பினரும் சந்திக்கும் சிக்கலைகளை பற்றியது தான் சூப்பர் டீலக்ஸ். தியாகராஜன் குமாரராஜா இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாகவும், ரம்யா கிருஷ்ணன் ஆபாச பட நடிகையாகவும் நடித்திருப்பார்கள்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் இந்த படத்தை, பொறுமை இருந்தால் தவறாமல் பாருங்க.

ஒத்த செருப்பு
விமர்சன ரீதியாக மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற படம் இது. ஆர் பார்த்திபனுக்கு பல விருதுகளையும் பெற்று தந்தது. Best Audiography, Special Jury Award என இரண்டு தேசிய விருதுகளையும் வென்ற படம் இது.
நெட்பிலிக்ஸில் நீங்கள் தவற விட கூடாத பாடங்களில் ஒன்று 'ஒத்த செருப்பு’.

சில்லுக் கருப்பட்டி
ஹலிதா ஷமீம் என்ற பெண் இயக்குனர் இயக்கிய படம் தான் இது. நான்கு கதைகளை கொண்ட இந்த படம் காதல் என்றால் அதற்கு வயது, பணம்.. etc என எந்த வேறுபாடும் இல்லை என்பதை அழகாக காட்டி இருக்கும் சில்லுக் கருப்பட்டி.

சர்வம் தாளமயம்
ஜீ.வி.பிரகாஷ் கேரியரில் நடிப்பு திறமையை காட்ட அதிகம் சான்ஸ் கொடுத்த படம் இது. மிருதங்கம் செய்யும் தொழில் செய்யும் ஒருவரது மகன் ஜீவி.. தானே தவில் வித்வான் ஆக விரும்பினால் என்ன ஆகும், இசையை குறிப்பிட்ட ஜாதி என்ற கட்டத்திற்குள் அடைத்து வைத்திருக்கும் சமுதாயத்தால் வரும் இன்னல்களை தாண்டி ஹீரோ தன் குறிக்கோளில் ஜெயித்தாரா என்பது தான் கதை.

மெர்சல்
மருத்துவத்துறையில் பணத்திற்காக செய்யப்படும் பல குற்றங்கள் பற்றியது தான் மெர்சல். மருத்துவர் மாறன் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து மக்களுக்கு சேவை செய்கிறார். வெளிநாட்டில் அவருக்கு விருது கொடுக்கிறார்கள். டிவி சேனலில் விவாத நிகழ்ச்சி அழைக்கும்போது அவர் ஹாஸ்பிடலில் செக்கப் என ஒன்று இருபதே பணம் சம்பாதிப்பதற்காக தான் என கருத்து பேசுகிறார்.
மறுபுறம் இன்னொரு விஜய் 'வெற்றி' மேஜிக்மேனாக இருக்கிறார். அவர் வரிசையாக மருத்துவதுறையை சேர்ந்த சிலரை கடத்தி கொலை செய்கிறார். இவர்கள் இருவருக்கும் உள்ள பின்னணி என்ன, வில்லன் எஸ்ஜே சூர்யாவுக்கும் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்பது தான் இந்த படத்தின் மீதி கதை.
