பாக்கலனா பாத்துடுங்க.. Zee5ல் மிஸ் செய்ய கூடாத லேட்டஸ்ட் தமிழ் படங்கள்
தற்போது ஓடிடியிலும் பல முக்கிய படங்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. அப்படி ஜீ5 தளத்தில் வெளிவந்து இருக்கும் சமீபத்திய படங்கள் பற்றிய தொகுப்பு இதோ..
விநோதய சித்தம்
நம்மை நம்பி தான் ஒட்டுமொத்த குடும்பமும் இருக்கிறது, நான் தான் அவர்களை செட்டில் செய்ய வேண்டும் என இருக்கும் ஒரு நபர் (தம்பி ராமையா) திடீரென விபத்தில் இறந்துவிடுகிறார்.அதன் பின் அவருக்கு கடவுளாக வரும் சமுத்திரக்கனி இரண்டாவது சான்ஸ் கொடுக்கிறார்.
வாழ்க்கையின் எதார்த்தங்கள், ஒருவர் இல்லை என்றாலும் எல்லாமே நடக்கும் என காட்டும் இந்த விநோதய சித்தம் படம். சமுத்திரக்கனி எழுதி இயக்கிய இந்த படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் நிச்சயம் யோசிக்க வைக்கும்.
முதல் நீ முடிவும் நீ
நீங்கள் 80ஸ், 90ஸ் கிட்ஸ் என்றால் இந்த படம் உங்களை அதிகம் ஈர்க்கும். முதல் நீ முடிவும் நீ படம் உங்களது பள்ளி கால, பதின் பருவ நினைவுகளை கிளறும் ஒரு கதை.
அந்த காலத்து பள்ளி வாழ்க்கை, காதல் என படம் பார்ப்பவர்களுக்கு nostalgia நிச்சயம்.
கமலி from நடுக்காவேரி
தஞ்சாவூரில் இருக்கும் நடுக்காவேரி கிராமத்தில் இருந்து ஐஐடிக்கு படிக்கச் செல்லும் ஒரு பெண் பற்றிய கதை தான் கமலி from நடுக்காவேரி.
அரசு பள்ளியில் படித்து வரும் கமலி, ஸ்டேட் 1ஸ்ட் பிடித்த பையனை பார்த்ததும் காதல், அதற்காக ஐஐடியில் சேர வேண்டும் என முடிவெடுக்கிறார். அதற்காக அவர் படும் கஷ்டங்கள் பற்றயது தான் படம்.
ஒரு கிராமத்து பெண் சென்னைக்கு வந்தால் சந்திக்கும் சிக்கல்கள் பற்றியும் படம் காட்டி இருக்கும்.
நேர்கொண்ட பார்வை
அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளிவந்த பிங்க் படத்தின் ரீமேக் தான். நோ மீன்ஸ் நோ.. அது விலைமாதுவாக இருந்தாலும் சரி என கருத்தை உணர்த்தும் படம் இது.
விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நேர்கொண்ட பார்வை படத்தை இதுவரை நீங்கள் பார்க்கவில்லை என்றால் தற்போது ஜீ5 தளத்தில் பார்க்க சிறந்த தேர்வாக இருக்கும்.
ஓ மை கடவுளே
அசோக் செல்வன், ரித்திகா சிங் ஆகியோர் நடித்து இருக்கும் இந்த படம் நண்பர்களாக இருந்து திடீரென திருமணம் செய்துகொள்ளும் ஜோடி பற்றியது தான்.
நண்பர்கள் என்பதால் ரொமான்ஸ் வரவில்லை, திருமணத்திற்கு ஓகே சொல்லி இருக்க கூடாது என ஒரு கட்டத்தில் தோன்ற விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் நிற்கின்றனர்.
அந்த நேரத்தில் கடவுள் (விஜய் சேதுபதி) வந்து ஹீரோவுக்கு தான் அப்போது எடுத்த முடிவை மாற்ற ஒரு சான்ஸ் கொடுக்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது, ஹீரோ உணர்ந்தது என்ன என்பது பற்றி தான் மீதி படம்.
வீரமே வாகை சூடும்
விஷால் நடிப்பில் து.பா.சரவணன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் ட்ரீட். தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்து பழகிப்போன வழக்கமான கதை தான் என்றாலும் இந்த படத்தை எதிர்பார்ப்பில்லாமல் ஒருமுறை ஓடிடியில் பார்க்கலாம்.
அதிகாரம் படைத்தவர்கள் செய்யும் தவறுகளுக்கு துணைபோகும் போலீஸ் துறை, அதிகாரத்தில் இருக்க என்ன வேண்டுமானாலும் செய்யும் அதிகார வர்க்கம்.. அவர்களை எதிர்த்து நிற்கும் ஹீரோ என வழக்கமான கதை கொண்டிருக்கும் இந்த படம்.
மீண்டும் மருதநாயகம்.. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்க்காத விஷயத்தை செய்யும் கமல்

Optical illusion: கண்களை ஏமாற்றும் இந்த படத்தில் இருக்கும் '6' இலக்கங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
