தி பெஸ்ட் ரிவெஞ் திரைப்படம் பார்க்க வேண்டுமா.. அப்போ இதை பாருங்க.. முழு லிஸ்ட்
தமிழ் சினிமாவில் வெளிவந்த தி பெஸ்ட் ரிவெஞ் திரைப்படங்கள் குறித்துதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
ஐ - 2015
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் ஐ. இப்படத்திற்காக தனது உடலை வருத்தி கொண்டு உடல் எடையை குறைத்து நடித்திருந்தார் விக்ரம். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க ஏமி ஜாக்சன், சந்தானம், சுரேஷ் கோபி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
மகாராஜா - 2024
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் கூட்டணியில் உருவாகி வெளிவந்த மகாராஜா படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. இப்படத்தில் சஞ்சனா, சிங்கம் புலி, அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், அபிராமி, திவ்ய பாரதி என பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் என்பவர் இசையமைத்திருந்தார்.
கஜினி - 2005
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் சூர்யா ஆகிய இருவருடைய திரை வாழ்க்கையில் டாப் திரைப்படங்கள் என்று எடுத்துக்கொண்டால், கண்டிப்பாக அந்த லிஸ்டில் இந்த படமும் இடம்பெறும். அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்த படமாகும் கஜினி. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்க அசின், நயன்தாரா, பிரதீப் ராம் சிங் ஆகியோர் நடித்திருந்தனர்.
அதே கண்கள் - 1967
ஏ.சி. திருலோக் சந்தர் இயக்கத்தில் ரவிச்சந்திரன் நடிப்பில் வெளிவந்த ரிவெஞ் திரில்லர் திரைப்படம் அதே கண்கள். வேதா இசையில் உருவான இப்படத்தில் அசோகன், நாகேஷ், காஞ்சனா, மேஜர் சுந்தரராஜன், சகுந்தலா என பலரும் நடித்திருந்தனர்.
ஊமை விழிகள் - 1986
ரவிச்சந்திரன், விஜயகாந்த், வாகை சந்திரசேகர், ஜெய் ஷங்கர், அருண்பாண்டியன், சரிதா, மலேசியா வாசுதேவன் நடிப்பில் உருவான இப்படத்தை இயக்குநர் ஆர். அரவிந்த் ராஜ் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு கதை எழுதி, தயாரித்திருந்தவர் ஆபாவாணன். மனோஜ் - கியான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தனர்.
ஆரம்பம் - 2013
அஜித் - விஷ்ணுவர்தன் என்றால் அது மாஸ் தான். அந்த மாஸ் கூட்டணியில் உருவாகி வெளிவந்த திரைப்படம்தான் ஆரம்பம். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ராணா டகுபதி, நயன்தாரா, டாப்ஸி, ஆர்யா என பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
விக்ரம் வேதா - 2017
புஷ்கர் - காயத்ரி மற்றும் விஜய் சேதுபதி - மாதவன் காம்போவில் உருவாகி வெளிவந்த படம் விக்ரம் வேதா. இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்க வரலக்ஷ்மி சரத்குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிரேம், கதிர், விவேக் பிரசன்னா, மணிகண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
அபூர்வ சகோதரர்கள் - 1989
மாபெரும் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வெளியான படம் அபூர்வ சகோதரர்கள். இப்படத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். அது அந்த அப்பு கதாபாத்திரம் எந்த முறை பாராட்டினாலும் போதாது என்று அளவிற்கு கமலின் நடிப்பு இருக்கும். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கமலுடன் மனோரமா, மௌலி, நாகேஷ், கௌதமி, ஜனகராஜ், ஜெய்ஷ்ங்கர் ஆகியோர் நடித்திருந்தனர்.
நான் சிகப்பு மனிதன் - 1985
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி 1985ல் வெளிவந்த படம் நான் சிகப்பு மனிதன். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அம்பிகா, பாக்யராஜ், சத்யராஜ், YG மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இமைக்கா நொடிகள் - 2018
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சோலோ ஹீரோயினாக நயன்தாரா நடித்து அசத்திய படம் இமைக்கா நொடிகள். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க அதர்வா, அனுராக் காஷ்யப், ராசி கண்ணா ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் கெஸ்ட் ரோலில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருப்பார்.
ஜெயிலர் - 2023
நெல்சன் திலீப்குமார் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் செய்த தரமான மாஸ் சம்பவம்தான் ஜெயிலர் படம். இப்படத்தில் விநாயகன் வில்லனாக நடித்திருந்தார். மேலும் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷராப் ஆகியோர் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
மெர்சல் - 2017
அட்லீ - விஜய் கூட்டணியில் வெளிவந்த தரமான ரிவெஞ் திரைப்படம் மெர்சல். வெற்றி, மாறன் மற்றும் வெற்றிமாறன் என மூன்று வேடங்களில் இப்படத்தில் விஜய் நடித்திருப்பார். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, சத்யராஜ், மனோரமா, சத்யன் என பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
லெவன் - 2025
இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி வெளிவந்த படம் லெவன். வெறித்தனமான திரைக்கதையில் உருவான இப்படத்தில் ரியா, அபிராமி, திலீபன், ரித்விகா, ஆடுகளம் நரேன் என பலரும் நடித்திருந்தனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.