செங்கல்பட்டில் உள்ள பிரபலமான திரையரங்கங்கள்.. இதோ
3 மணி நேரம் நம் அனைவரையும் நம்முடைய அனைத்து கவலைகளையும் மறக்கடிக்க செய்யும் விஷயம் திரைப்படம். அதை நாம் திருவிழா போல் கொண்டாடும் இடம் திரையரங்கம்.
அப்படி நம்மை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் திரையரங்கம் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். செங்கல்பட்டில் உள்ள பிரபலமான திரையரங்குகளை தற்போது பார்க்கலாம்..
எஸ்.ஆர்.கே. சினிமாஸ்
4K லேசர் தொழில்நுட்பத்துடன் இயங்கி வரும் இந்த திரையரங்கம் காஞ்சிபுரம் உயர் சாலை, ஜே சி கே நகர், செங்கல்பட்டில் அமைந்துள்ளது. ரசிகர்களால் கொண்டாடப்படும் திரையரங்கங்களில் இதுவும் ஒன்று.
லதா சினிமாஸ்
56, அழகேசன் நகர், வரதராஜா நகர், செங்கல்பட்டில் அமைந்துள்ள இந்த திரையரங்கம் Atmos 2K 3D தொழில்நுட்பத்துடன் இயங்கி வருகிறது. மேலும் இந்த திரையரங்கில் இரண்டு ஸ்க்ரீன் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
புவனேஸ்வரி தியேட்டர்
2006ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த திரையரங்கம் இன்று வரை வெற்றிகரமாக போய்க்கொண்டு இருக்கிறது. பிரபலமான திரையரங்கங்களில் ஒன்று புவனேஸ்வரி தியேட்டர் குடுவாஞ்சேரி, செங்கல்பட்டில் அமைந்துள்ளது.
C3 சினிமாஸ் Laurel Mall
எண்.6 ஜிஎஸ்டி சாலை மாமண்டூர், மதுராந்தகம் தாலுக்கா, காஞ்சிபுரத்தில் உள்ள இந்த C3 சினிமாஸ் திரையரங்கம் Laurel Mall உள்ளே அமைந்துள்ளது. இரண்டு ஸ்க்ரீன்களை கொண்டுள்ள இந்த திரையரங்கம் RGB லேசர் தொழிநுட்பத்தில் இயங்கி வருகிறது.