தூத்துக்குடியில் உள்ள சிறந்த திரையரங்குகள் என்னென்ன தெரியுமா?.. லிஸ்ட் இதோ
தூத்துக்குடி, அதன் முத்துக்களுக்கும் பிரபலமான ஸ்வீட் வகையான மக்ரூனுக்கும் பெயர் பெற்றவை.
இவை அனைத்தையும் தாண்டி தூத்துக்குடியில் இளைஞர்கள் கூடும் இடம் ஒன்று உள்ளது, அது தான் திரையரங்குகள். அந்த வகையில், தூத்துக்குடியில் உள்ள சிறந்த திரையரங்குகள் குறித்து கீழே காணலாம்.
சத்ய தியேட்டர்:
தாளமுத்து நகர், அழகேசபுரம் ரோட்டில் சாய்பாபா கோவில் அருகில், கிருஷ்ணராஜபுரம் தூத்துக்குடியில் அமைந்துள்ள இந்த திரையரங்கம் அங்கு மிகவும் பிரபலமான ஒன்றாகும். 4K டால்பி அட்மாஸ் (Dolby Atmos) வசதியுடன் இந்த தியேட்டர் இயங்கி வருகிறது.
ஸ்ரீ லட்சுமி தியேட்டர்:
No 14 A, தூத்துக்குடி சாத்தான்குளம், மாணிக்கவாசகர் புரத்தில் Velmurugan Traders அருகில் அமைந்துள்ள இந்த திரையரங்கம் ரசிகர்கள் விரும்பி பார்க்க நினைக்கும் திரையரங்குகளில் ஒன்றாக உள்ளது.
ஸ்ரீ பாலகிருஷ்ணா டாக்கீஸ்:
4K Dolby Atmos வசதியுடன் அமைந்த இந்த திரையரங்கம் சிவன் கோவில் தெரு, தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியில் அமைந்துள்ளது.
கிளியோபாட்ரா சினிமா ஹால்:
No 247, சௌத் காட்டன் தெருவில் அமைந்துள்ள இந்த கிளியோபாட்ரா சினிமா ஹால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான திரையரங்குகளில் ஒன்று.