இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையில் வெளிவந்த சிறந்த பாடல்கள்
இசையமைப்பாளர் வித்யாசாகர் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக சீதா என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 1990 ஆம் ஆண்டு அறிமுகமானார். அப்போதில் இருந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி திரைப்படங்களிலும் பணியாற்றி வந்தார்.
குறிப்பாக தமிழ் சினிமாவின் 2000-களில் தற்போது உள்ள அனைத்து டாப் ஹீரோ திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார் வித்யாசாகர். விஜய், விக்ரம், அஜித், சூர்யா என முக்கிய நடிகர்களின் திரைபயணத்தில் பெரிய ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார் வித்யாசாகர். தனது மெலோடி பாடல்கள் மூலம் Melody King எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார் வித்யாசாகர். அப்படியான இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையில் வெளிவந்த ஒரு சில சிறந்த மற்றும் பெரிய ஹிட்டான பாடல்கள் குறித்து தான் பார்க்க இருக்கிறோம்.
மலரே மௌனமா
இசையமைப்பாளர் வித்யாசாகர் ஏகப்பட்ட திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றி வந்தாலும், அவருக்கு பட்டிதொட்டி ஏங்கும் ஹிட் அடிக்கும் அளவு ஹிட் பாடல் அமையாமல் இருந்தன. அதனை நிறைவேறும் வகையில் தான் 1995 ஆம் ஆண்டு வெளியான கர்ணா திரைப்படத்தில் அமைந்தது மலரே மௌனமா பாடல். செம மெலோடி பாடலான இதனை ரசிகர்களுக்கு இன்றும் கேட்டு வருகின்றனர்.
அன்பே சிவம்
கமல் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அன்பே சிவம், அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இப்படத்தில் இசையமைப்பாளர் வித்யாசாகரின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகி உள்ளது. குறிப்பாக நினைத்தாலே நாம் அனைவருக்கும் நியாபகம் வர வைக்கும் பாடல் அன்பே சிவம். கமலின் குரலில் வந்த அந்த பாடல் வித்யாசாகரின் சிறந்த பாடல்களில் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை.
அப்படி போடு
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் தரணி இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கிய திரைப்படமான கில்லி மிக பெரிய வெற்றியடைய அப்படத்தின் பாடல்களும் முக்கிய காரணம். அப்படியான இப்படத்தில் வித்யாசாகர் அல்பமே ஹிட் கொடுத்திருப்பார். குறிப்பாக அப்படி போடு பாடல் பான் இந்தியா அளவில் ஹிட், தமிழக மக்கள் மட்டுமின்றி இந்த பாடல் இந்தியளவில் ஒளித்ததாக வித்யாசாகரே கூறியிருந்தார்.
காற்றின் மொழி
இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மொழி. மிகவும் வித்தியசமான கதைகளத்துடன் வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் தங்களின் பேராதரவை கொடுத்திருப்பார்கள். அப்படியான இப்படத்தில் காற்றின் மொழி பாடலை யாராலும் மறக்க முடியாது. இப்படத்தின் அடையாளமாக குறிப்பிட்ட அந்த பாடல் அமைந்திருக்கும்.
தேவுடா தேவுடா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் பி. வாசு 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. 800 நாட்களுக்கு மேல் வரலாறு காணாத வெற்றியடைந்த இப்படத்தை யாராலும் மறந்திட முடியாது. இப்படம் போலவே வித்யாசாகர் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சென்ஷேனல் ஹிட்.
அதன்படி ரஜினியின் ஸ்டைலில் SPB-ன் குரலில் ரசிகர்களுக்கு தத்துவ பாடலாக வெளிவந்த தேவுடா தேவுடா மிக பெரிய ஹிட்.
விஜய்யின் வாரிசு படப்பிடிப்பில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்