‘நாக்க முக்கா’ முதல் ‘மஸ்காரா’ வரை.. விஜய் ஆண்டனியின் சூப்பர்ஹிட் பாடல்கள்

By Parthiban.A Jul 29, 2022 01:30 AM GMT
Report

இசையமைப்பாளராக இருந்து அதன் பின் நடிகர் ஆனவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக அவரது பல பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கின்றன. மேலும் அவர் நடிக்கும் படங்களுக்கும் அவரே தான் இசையமைத்து வருகிறார். அந்த பாடல்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

அப்படி விஜய் ஆண்டனியின் இசையில் வந்து சூப்பர்ஹிட் ஆன பாடல்கள் இதோ

‘நாக்க முக்கா’ முதல் ‘மஸ்காரா’ வரை.. விஜய் ஆண்டனியின் சூப்பர்ஹிட் பாடல்கள் | Best Vijay Antony Songs In Tamil

ஆத்திச்சூடி - TN 07 AL 4777

TN 07 AL 4777 படத்தில் வரும் ஆத்திச்சூடி பாடல் வெளியான நேரத்தில் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனது. ஆத்திச்சூடி வரிகளை அப்படியே எடுத்து 'இது நியூ ஏஜ் ஆத்திச்சுடி' என்கிற பெயரில் அந்த பாடலை உருவாக்கி இருந்தார்.

அந்த பாடலின் இடையே அவரே பாடவும் செய்திருப்பார்.

நூறு சாமிகள் - பிச்சைக்காரன்

விஜய் ஆண்டனி நடிப்பில் மிகப்பெரிய ஹிட் ஆன படம் பிச்சைக்காரன். அம்மா சென்டிமென்டை மையப்படுத்திய கதை என்பதால் அந்த படத்தில் அம்மாவை பற்றி ஒரு பாடலும் இருக்கும்.

‘நாக்க முக்கா’ முதல் ‘மஸ்காரா’ வரை.. விஜய் ஆண்டனியின் சூப்பர்ஹிட் பாடல்கள் | Best Vijay Antony Songs In Tamil

இந்த படம் ஹிட் ஆனது போலவே நூறு சாமிகள் பாடலும் மிகப்பெரிய ஹிட் ஆனது. அம்மா பாடல்கள் என தேடினால் அதில் நிச்சயம் இந்த பாடலும் நிச்சயம் இடம்பிடித்து இருக்கும்.

 

அழகாய் பூக்குதே - நினைத்தாலே இனிக்கும்

2015ல் ரிலீஸ் ஆன இந்த பாடல் காதலர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. பெண்களும் உருகி உருகி காதலிப்பார்கள் என காட்டும் விதத்தில் இருக்கும் இந்த பாடல் நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெற்று இருந்தது.

 

சின்னத்தாமரை - வேட்டைக்காரன்

விஜய்யின் வேட்டைக்காரன் படத்திற்கு விஜய் ஆண்டனி தான் இசையமைத்து இருந்தார். அதில் வந்த எல்லா பாடல்களுமே ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. குறிப்பாக சின்ன தாமரை பாடல் விஜய் ரசிகர்கள் அதிகம் கொண்டாடிய ஒன்று.

‘நாக்க முக்கா’ முதல் ‘மஸ்காரா’ வரை.. விஜய் ஆண்டனியின் சூப்பர்ஹிட் பாடல்கள் | Best Vijay Antony Songs In Tamil

அதே படத்தில் வரும் புலி உறுமுது, கரிகாலன் உள்ளிட்ட பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதை மறுக்க முடியாது. 

நாக்க முக்க - காதலில் விழுந்தேன்

நகுலின் காதலில் விழுந்தேன் படத்திற்காக விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பாடல் தான் நாக்க முக்க.

2008ல் வெளிவந்த இந்த பாடல் இளைஞர்களை அதிகம் கவர்ந்த ஒன்று.

 

மஸ்காரா - சலீம்

விஜய் ஆண்டனி படங்களில் வரும் பார்ட்டி பாடல்களுக்கு எப்போது ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும். சலீம் படத்தில் வரும் மஸ்காரா பாடலை விஜய் ஆண்டனி சுப்ரியா ஜோஷி உடன் இணைத்து பாடி இருப்பார்.

அந்த பாடலுக்கு டான்ஸ் ஆடிய அஸ்மிதாவும் மஸ்காரா பாடல் ஹிட் ஆக ஒரு காரணம்.

‘நாக்க முக்கா’ முதல் ‘மஸ்காரா’ வரை.. விஜய் ஆண்டனியின் சூப்பர்ஹிட் பாடல்கள் | Best Vijay Antony Songs In Tamil

உங்களுக்கு பிடித்த விஜய் ஆண்டனியின் வேறு பாடல்கள் என்னென்ன என்பதை கமெண்டில் சொல்லுங்க.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US