யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளிவந்த சிறந்த பாடல்கள்.. ஒரு சிறப்பு பார்வை
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்படும் இசையமைப்பாளர்களில் மிகமுக்கியமானவர் யுவன் ஷங்கர் ராஜா. இவருடைய இசையில் வெளிவந்த பல பாடல்கள் ரசிகர்களின் மனதை உறையவைத்துள்ளது. அப்படி ரசிகர்களின் நாடி நெருப்பு அனைத்தையும் கட்டுப்போட்டு வைத்திருக்கும் சிறந்த பாடல்கள் என்னென்ன என்று வாங்க பார்க்கலாம்..
ஒரு நாளில்
நா. முத்துக்குமார் வரியில் யுவனின் மிரட்டலான இசையில் உருவான பாடல் தான் ஒரு நாளில். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த புதுப்பேட்டை படத்தில் இடம்பெற்ற இப்பாடல் யுவனின் இசை பயணத்தில் முக்கியமான ஒன்று. அன்று முதல் இன்று வரை சோகத்தில் ஆழ்ந்திருக்கும் பலருக்கும் ஆறுதலாக இருந்த பாடல்களில் இதுவும் ஒன்றாகும்.
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், விமல் ஒன்றிணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா. இப்படத்தில் கிளைமாக்ஸ் பகுதியின் இடம்பெறும் தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பாடல் இன்றும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. ஒவ்வொரு முறை இந்த பாடலை கேட்க்கும் பொழுதும் கண்களே கலங்கிவிடும்.
காதல் வளர்த்தேன்
சிம்பு இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் மன்மதன். யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் மாபெரும் அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. குறிப்பாக காதல் வளர்த்தேன். இன்றும் பல காதலர்கள் மத்தியில் ஒலித்துக்கொண்டிருக்கும் யுவனின் பாடல்களில் இதுவும் ஒன்றாகும்.
எதிர்த்து நில்
கார்த்தி நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பிரியாணி. யுவன் இசையில் உருவான இப்படத்தின் ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட். அதிலும் குறிப்பாக எதிர்த்து நில் பாடல் இளைஞர்களின் Favorite ஆகும். ஐந்து முன்னணி இசையமைப்பாளர்களான யுவன், டி.இமான், விஜய் ஆண்டனி, தமன், ஜி.வி.பிரகாஷ் இணைந்து பாடிய பாடல் தான் எதிர்த்து நில்.
அய்யய்யோ
அமீர் இயக்கத்தில் கார்த்தி மற்றும் ப்ரியாமணி நடித்து வெளிவந்த திரைப்படம் பருத்திவீரன். இப்படம் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை பயணத்தில் மிகமுக்கியமான ஒன்று. ஆம், இப்படத்தில் யுவன் இசையமைத்த அணைத்து பாடல்களும் சூப்பர்ஹிட்டானது. குறிப்பாக அய்யய்யோ என் உருசுக்குள்ள தீய வெச்சான் எனும் துவங்கும் பாடல் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஒன்று.
சமந்தா - நாகசைதன்யா விவாகரத்துக்கு இந்த நடிகர் தான் காரணம்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

ஏன் அழுகனும்? கொக்கைன் அடிக்கையில் குழந்தை நினைவுக்கு வரலயா? ஸ்ரீகாந்த்தை விளாசிய பிரபலம் IBC Tamilnadu
