இலங்கை பிரபலம் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி புகழ் அப்துல் ஹமீதை நியாபகம் இருக்கா?- அவருக்கு இப்படியொரு சோகமா?
அப்துல் ஹீமீத்
அப்துல் ஹமீது 80 மற்றும் 90 காலகட்டத்தில் ஞாயிறு கிழமைகளில் நாம் அனைவரும் கேட்டு ரசித்த ஒரு நிகழ்ச்சி தான் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து மக்கள் மனதை கவர்ந்தவர் பி.எச். அப்துல் ஹமீத்.
இலங்கையை பிறப்பிடமாக கொண்ட இவர் வறுமையில் வாடும் குடும்பத்தில் பிறந்து தனது திறமைகள் மூலம் வளர்ச்சி பெற்றுள்ளார். தற்போது இவர் மீடியா பக்கம் காணவில்லை என்பதால் இறந்துவிட்டார் என ஒரு செய்தி பரவ இதுகுறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார் அப்துல்.
பிரபலத்தின் பேச்சு
அப்துல் கூறியதாவது, எங்களது வானொலியில் பணியாற்றும் ஒரு சகோதரியின் கணவர் இறந்துள்ளார், அவரது பெயரும் ஹமீத். அவரது இறப்பு வானொலியில் பரவ எனது மனைவிக்கு வருத்தம் தெரிவிக்கும் அழைப்பு வந்தது.
ஆனால் இறந்தது வேறொருவர், பெயர் ஒன்றாக இருந்ததால் இந்த குழப்பம் வந்துள்ளது. மொத்தமாக நான் இதுவரை 3 முறை இறந்திருக்கிறேன் என அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
நீயா நானா புகழ் கோபிநாத்தின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக வெளியான வீடியோ