அம்மா, அப்பா இருவருமே இல்லை, வாழ்க்கையில் பல சோகங்களை அனுபவித்துள்ள நடிகர் பரத் ஜெயந்த்- எமோஷ்னல் பேட்டி
பரத் ஜெயந்த்
விஜய்யின் ப்ரண்ட்ஸ், விஜயகாந்த் நடித்த வானத்தை போல போன்று சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இப்போதும் மக்கள் மனதில் நிலைத்து இருப்பவர் நடிகர் பரத் ஜெயந்த்.
படங்களை தாண்டி வாரிசு, பூம் பூம் ஷக்கலக்க உள்ளிட்ட சீரியல்களிலும் பரத் நடித்திருக்கிறார். அதன்பிறகு சினிமா பக்கமே இவரை காணவில்லை, என்ன செய்கிறார் என்பது கூட தெரியாமல் இருந்தது.
ஆனால் தற்போது பரத் ஜெயந்த் என்ன செய்கிறார் என்ற விவரமும், அவரது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களையும் பேட்டியளித்துள்ளார்.

சோகமான விஷயம்
இவர் பெசண்ட் நகரில் The Tickle Truck எனும் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். 2018 ஆம் ஆண்டுதான் இந்த கடையை தொடங்கினேன்.
இந்த கடையில் வார இறுதி நாட்களில் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். என் தந்தை நான் சிறியதாக இருக்கும் போதே என் தாயை விட்டுவிட்டு போய்விட்டார். எனவே என் அம்மா தான் என்னை வளர்த்தார், அவர் மிகவும் தைரியமானவர்.

ஆனால் இப்போது என் அம்மா-அப்பா இருவருமே இல்லை. அம்மா இல்லாத வெறுமை ஒரு மாதிரியாக இருக்கும், நிறைய வருத்தப்பட்டுள்ளேன்.
கடைசியாக அம்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அம்புலன்ஸில் ஏறும்போது தனக்கு பயமாக இருக்கிறது என்றார், அத்துடன் சுயநினைவு இல்லாமல் போய்விட்டார்.
என் அம்மா இறந்தும் பணத்தை பறிக்க 3 நாட்களாக அவருக்கு சிகிச்சை கொடுத்தார்கள் என்று சோகமான சம்பவம் குறித்து எமோஷ்னலாக கூறியுள்ளார்.

நடிகர் ரஜினியை திடீரென சந்தித்துள்ள இலங்கை தூதர்- இப்படியொரு விஷயம் நடக்கப்போகிறதா?