பாரதியுடன் இணையும் கண்ணம்மா.. ஒருவழியாக முடிவுக்கு வந்த சீரியல்
பாரதி கண்ணம்மா
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியலில் பாரதி கண்ணம்மாவும் ஒன்று.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறது என சில மாதங்களாகவே செய்திகள் வெளிவருகிறது.
ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. இப்போது முடிந்துவிடும், இதோ அடுத்த வாரம் பாரதி கண்ணம்மா முடிவுக்கு வருகிறது என தகவல் மட்டுமே வெளிவந்த நிலையில், உறுதியாக எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
முடிவுக்கு வரும் சீரியல்
இந்நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலின் தற்போதுள்ள நிலைப்படி இன்னும் ஓரிரு வாரங்களில் சீரியல் முடிவுக்கு வருகிறது என தெரியவந்துள்ளது. பாரதியின் நினைவுகளை மீட்டெடுக்க கண்ணம்மா போராடி வருகிறார்.
பாரதியின் நினைவுகள் பழைபடி மீண்டு வந்தபின், பாரதியியும் - கண்ணம்மாவும் இணைத்துவிட்டால், பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என்கின்றனர்.
சமீபத்தில் வெளிவந்த ப்ரோமோவை பார்க்கும் பொழுது கூட இருவரும் இணைய போவதுபோல் தான் காட்டியுள்ளனர். பொறுந்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.
அழகில் முன்னணி நடிகைகளை மிஞ்சும் நடிகை கவுதமியின் மகள்.. புகைப்படத்துடன் இதோ