கண்ணம்மாவை கொலை செய் வந்த மர்ம நபர்கள், காப்பாற்றினாரா பாரதி.. பரபரப்பான வீடியோ
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கண்ணம்மாவாக ஏற்கனவே நடித்த நடிகை வினுஷா தேவி நடிக்கிறார்.
வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடிகை ஃபரினா நடிக்க பாரதி மட்டும் மாறியுள்ளார். ஆம், பாரதி கதாபாத்திரத்தில் அருணுக்கு பதிலாக நடிகர் சிப்பு சூர்யன் பாரதியாக நடித்து வருகிறார்.
பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியை எப்படியாவது திருமணம் செய்துவிட வேண்டும் என்று இருந்த வெண்பா பாரதி கண்ணம்மா 2வில் பாரதியை வெறுத்து ஒதுக்குகிறார். இதுவே ரசிகர்களுக்கு பெரும் ஷாக் கொடுத்தது.
அடுத்து நடக்கபோவது இதுதான்
இந்நிலையில், சீரியல் ஆரம்பத்தில் மோதிக்கொண்ட பாரதியும், கண்ணம்மாவும், இனி காதலர்களாக மாறப்போகிறார்கள். ஆம், அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
வெளியூர் சென்றிருக்கும் பாரதியும், கண்ணம்மாவும் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்குகிறார்கள். ஒரே ஒரு ரூம் தான் இருக்கிறது என்ற காரணத்தினால் கண்ணம்மா ஹோட்டல் ரூமில் உறங்க, பாரதி தன்னுடைய காரில் உறங்குகிறார்.
இந்த நேரத்தில் கண்ணம்மாவை கொலை செய்ய சிலர் முயற்சி செய்கிறார்கள். இதை தடுக்கும் ஹீரோ பாரதி மீதி கண்ணம்மாவிற்கு காதல் மலர்கிறது என்பது போல் ப்ரோமோவில் கட்டப்பட்டுள்ளது.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..
குக் வித் கோமாளி மணிமேகலையின் தம்பியை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ