தாய்யை எதிர்த்து கண்ணம்மா கழுத்தில் தாலி கட்டிய பாரதி.. அதிர்ச்சியில் உறைந்துபோன சௌந்தர்யா.. இனி நடக்கப்போவது என்ன =
பாரதி கண்ணம்மா 2
பாரதி கண்ணம்மா சீரியல் பல கோடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சீரியல்களில் ஒன்று. முதல் சீசன் இனிதே நிறைவடைந்த நிலையில், பாரதி கண்ணம்மா 2 கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது.
முதல் சீசனில் இருந்து சற்று வேறுபட்ட கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பாரதி கண்ணம்மா சீரியலில் அருணுக்கு பதிலாக சிப்பு சூர்யன் என்பவர் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால், முதல் சீஸனின் கண்ணம்மாவாக நடித்த அதே வினுஷா தேவி தான் இதிலும் கண்ணம்மா ரோலில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக நடித்து வருகிறார்.
தற்போதைய பாரதி கண்ணம்மா சீரியல் கதைப்படி, வில்லி வெண்பாவிற்கும் ஹீரோ பாரதிக்கும் திருமணம் செய்து வைக்க பாரதியின் தாய் சௌதர்யா முடிவு செய்துவிட்டார். இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடைபெற்று முடிந்துவிட்டது. இதனால் பாரதியின் காதலி கண்ணம்மா மனமுடைந்து போய்விட்டார்.
திருமணம்
இப்படியொரு சூழ்நிலையில், கண்ணம்மாவை கோவிலில் வைத்து தனது தாய்க்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள பாரதி முடிவு செய்துவிட்டார். கண்ணம்மாவை கோவிலுக்கு அழைத்து வந்து பல பிரச்சனைகளுக்கு இடையே தனது தாய்யையும் எதிர்த்து கண்ணம்மாவின் கழுத்தில் தாலி கட்டிவிட்டார்.
இதை பாரதியின் தாய்யும், வில்லி வெண்பா உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் பார்த்துவிட்டனர். தனது பேச்சை மீறி கண்ணம்மாவை பாரதி திருமணம் செய்ததால், சௌதர்யா என்ன செய்யப்போகிறார்! இனி பாரதி கண்ணம்மா சீரியலில் என்னென்ன திரும்புங்கள் எல்லாம் நிகழப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
வெளிவந்து 27 வருடங்கள் ஆகியுள்ள காதல் கோட்டை படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா