பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்.. யார் தெரியுமா
பிக் பாஸ் 8
விஜய் தொலைக்காட்சியின் பிரமாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ். இதனுடைய 8வது விரைவில் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியை 7வது சீசன் வரை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
ஆனால், கடந்த சில வாரங்களுக்கு முன், தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தற்காலிகமாக விலகப்போவதாக கமல் அறிவித்தார். இதன்பின் யார் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது என்கிற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்தது.
சிம்பு, ரம்யா கிருஷ்ணன், சூர்யா என பலருடைய பெயர்கள் இதில் கூறப்பட்டு வந்த நிலையில், இறுதியாக விஜய் சேத்துபதி தான் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை.
இவர் தானா?
இந்த நிலையில், சீசன் 8ல் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இதில் தற்போது பிக் பாஸ் 8ல் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் அருண் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதாக சொல்லப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் வெற்றியடைந்த சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் அருண். இவர் துவங்கவுள்ள பிக் பாஸ் 8ல் போட்டியாளராக களமிறங்கப்போகிறார் என பேசப்பட்டு வருகிறது.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
