பாரதி கண்ணம்மா சீரியல் குறித்து அதிரடியாக வந்த முக்கிய தகவல்- எதிர்ப்பார்க்காத ரசிகர்கள்
பாரதி கண்ணம்மா
கருத்தமுத்து என்ற மலையாள தொடரின் ரீமேக் தான் இந்த பாரதி கண்ணம்மா என்ற சீரியல். குலோபல் வில்லேஜர்ஸ் சீரியலை தயாரிக்க பிரவீன் பென்னட் இயக்க அருண் மற்றும் ரோஷினியை முக்கிய நடிகர்களாக வைத்து தொடர் தொடங்கப்பட்டது.
2019ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடரில் இப்போது வரை நிறைய நடிகர்கள் மாற்றம் நடந்தது, அதிலும் நாயகி மாற்றம் நடந்தது தான் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.
வினுஷா என்பவர் இப்போது கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.
சீரியலின் அதிரடி கதைக்களம்
தற்போது தொடரில் தீவிரவாதிகள் மருத்துவமனையை கைப்பற்ற ஒருபக்கம் போலீசார் அவர்களிடம் இருந்து மக்களை மீட்க போராடி வருகிறார்கள். இந்த வாரத்திற்கான சீரியல் புரொமோ வெளியாகியுள்ளது.
அதில் பாரதி மீது வெடிகுண்டை தீவிரவாதிகள் கட்ட கண்ணம்மா நானும் உங்களுடனே இறக்கிறேன் என அவருடனே இருக்கிறார்.
தற்போது என்னவென்றால் பாரதி மற்றும் கண்ணம்மா வாழ்க்கை இப்படியே முடிய லட்சுமி மற்றும் ஹேமா வைத்து இனி கதை நகரும் என்கின்றனர்.
இதைக்கேட்ட ரசிகர்கள் இது சரியான முடிவு இல்லை, பாரதிக்கு உண்மை தெரிய வேண்டும் அதுதான் சரி என மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
சிம்புவுடன் முதன்முறையாக புகைப்படம் எடுத்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை- வைரலாகும் போட்டோ