அப்பா என்று தெரிந்ததும் பாரதியை வியப்பாக பார்க்கும் லட்சுமி- அவர்களுக்குள் நடந்த அழகிய தருணம், புரொமோவுடன் இதோ
பாரதி கண்ணம்மா ஒரே ஒரு DNA டெஸ்ட் ரிப்போர்ட் இருந்தாலும் போதும் கதையே முடிந்துவிடும். ஆனால் கதையாசிரியரோ இதற்குள் முடித்தால் எப்படி என கதையில் ஏதேதோ விஷயத்தை புகுத்துகிறார்.
இன்றைய எபிசோட்
இன்றைய எபிசோடில் பாரதி தனது அப்பா என தெரிந்துகொண்ட லட்சுமி கோவில் சென்று சாமி தரிசனம் செய்கிறார். அங்கு திடீரென தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகி சரஸ்வதி வர இருவருக்கும் சில காட்சிகள் வருகின்றன.
பின் பாரதியை கொஞ்சம் குழப்ப வெண்பா அவரது மருத்துவமனைக்கு வந்து வழக்கம் போல் சகுனி வேலை செய்கிறார். அப்போது இறுதியில் செம என்ட்ரீ கொடுக்கிறார் கண்ணம்மா, அத்துடன் இன்றைய தொடர் முடிகிறது.
அப்பாவின் ஏக்கத்தில் லட்சுமி
பாரதியை தனது அப்பா என தெரிந்துகொண்ட லட்சுமி அவரை காண மருத்துவமனைக்கு செல்கிறார். தனது அப்பாவுடன் சில நேரம் இருக்க ஆசைப்பட அவரும் லட்சுமியை அழகாக கவனிக்கிறார்.
இதோ அப்பா-மகளின் அழகிய புரொமோ,
தொகுப்பாளினி டிடி கர்ப்பமாக இருக்கிறாரா?- முதன்முறையாக வெளியான புகைப்படம்