கைதி ஹிந்தி ரீமேக் வெற்றியா தோல்வியா? முதல் வார வசூல் விவரம்
ஹிந்தி சினிமாவில் கடந்த சில வருடங்களாக ஹிட் கொடுக்க முடியாமல் ஒட்டு மொத்த பாலிவுட்டும் திணறிய நிலையில் ஷாருக் கான் நடித்த பதான் படம் தான் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து மீண்டும் பாலிவுட் துறையை ட்ராக்கிற்கு கொண்டு வந்தது.
தற்போது ஹிந்தியில் இந்த வருடத்தின் அடுத்த பெரிய பட்ஜெட் படமான போலா கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தின் ரீமேக் தான் அந்த படம். இதில் அஜய் தேவ்கன், தபு உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.
4 நாள் வசூல்
Bholaa படம் முதல் நான்கு நாட்களில் 44.28 கோடி ருபாய் மட்டும் வசூலித்து இருக்கிறது.
- வியாழன்: 11.2 கோடி ரூ.
- வெள்ளி: 7.40 கோடி ரூ.
- சனி: 12.20 கோடி ரூ.
- ஞாயிறு: 13.48 கோடி ரூ.
என மொத்தம் 44.28 கோடி ருபாய் வசூலித்துள்ளது Bholaa.
இந்த படம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில், தோல்வியை தவிர்க்கவே இன்னும் மிகப்பெரிய தொகை வசூலிக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தினமும் குளிக்க 25 லிட்டர் பால், ரோஜாவில் படுக்கை.. எல்லைமீறும் பிரபல நடிகர்