தினமும் குளிக்க 25 லிட்டர் பால், ரோஜாவில் படுக்கை.. எல்லைமீறும் பிரபல நடிகர்
பொதுவாக ஹீரோக்கள் எப்போதும் கோடிக்கணக்கில் சம்பாதிப்பார்கள் என்பதால் எப்போதும் சொகுசு வாழ்க்கை தான் வாழ்வார்கள். அதே நேரத்தில் அவர்கள் நடிக்க வரும் போது தயாரிப்பாளர்களுக்கு எக்கச்சக்க செலவு வைப்பார்கள்.
அப்படி போஜ்புரி நடிகர் ரவி கிஷன் அளித்திருக்கும் பேட்டியில் சில அதிர்ச்சி விஷயங்களை கூறி இருக்கிறார்.
பாலில் குளிப்பேன்
நான் குளிப்பதற்காக தினமும் 25 லிட்டர் பால் மற்றும் தூங்க ரோஜாவில் மெத்தை கேட்பேன். அதை தர முடியாது என்பதற்காகவே என்னை Gangs of Wasseypur படத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. இப்படி சில விஷயங்களை கேட்டதால் என் கெரியர் அதிகம் அடிவாங்கியது.
எதுவும் இல்லாத நிலையில் இருந்து வளர்ந்து வந்து திடீரென பெரிய இடத்திற்கு வரும் போது ஒருவரின் மூளை தடுமாறும். மும்பை போன்ற ஒரு இடம் எல்லோரையும் தடுமாற வைக்கும், நானும் அப்படி தடுமாறிவிட்டேன். ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் பால், ரோஜா போன்ற விஷயங்கள் கேட்பதை நிறுத்திவிட்டேன் என ரவி கிஷன் கூறி இருக்கிறார்.
கொரியன் படத்தின் ரீமேகில் நடிக்கிறாரா அஜித்?.. வெளியான புதிய தகவல்