கைதி ஹிந்தி ரீமேக் : தமிழ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த 'Bholaa' ட்ரைலர்..
கைதி ஹிந்தி ரீமேக்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த படம் கைதி. இப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது. இதன்பின் தான் லோகேஷ் கனகராஜ் இந்தியளவில் தெரிய துவங்கினார்.
இப்படத்தை ஹிந்தியில் Bholaa எனும் தலைப்பில் ரீமேக் செய்ய போகிறார்கள் என கடந்த ஆண்டு அறிவிப்பு வெளிவந்தது. இப்படத்தை அஜய் தேவ்கன் தான் இயக்கி நடித்துள்ளார்.
'Bholaa' ட்ரைலர்
கார்த்தி நடித்திருந்த ஹீரோ கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்க நரேன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் தபு நடிக்கிறார். இதுவே தமிழ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அதன்பின் ஏற்கனவே வெளிவந்த இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றாலும் பல விமர்சனங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெற்றது.
அதை தொடர்ந்து தற்போது வெளிவந்துள்ள இப்படத்தின் ட்ரைலரில் மசாலா ஓவராக இருக்கின்ற காரணத்தினால் தமிழ் ரசிகர்கள் சற்று கடுப்பாகியுள்ளனர்.
அதுமட்மின்றி கைதி படத்தில் ஒரு பாடல் கூட இருக்காது. ஆனால், இந்த Bholaa படத்தில் ஒரு ஐட்டம் பாடல் இடம்பெறுகிறது. இதுவும் தமிழ் ரசிகர்கள் ஒரு அதிர்ச்சி தான்.
அதுமட்டுமின்றி படத்தில் வரும் சிறுத்தை, ஹீரோ அடித்தவுடன் அடியாட்கள் எலும்பு உடைந்து வெளியே தெரிவது. கைதி படத்தில் கார்த்தி தனது மனைவி குறித்து சொல்லும் பிளாஷ் பேக் இப்படத்தில் அமலா பால் கதாபாத்திரத்தில் வருவது என அனைத்தையும் தமிழ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பதற்காகவே வைத்துள்ளார்களா என கேள்வி எழுந்துள்ளது.
இதோ அந்த Bholaa ட்ரைலர்..
விபத்தில் படுகாயம் அடைந்த அமிதாப் பட்சன்! எலும்பு முறிந்து தீவிர சிகிச்சை