Bhool Bhulaiyaa 3: திரை விமர்சனம்

Report

அனீஸ் பஸ்மீ இயக்கத்தில் வெளியாகியுள்ள Bhool Bhulaiyaa 3 காமெடி ஹாரர் திரைப்படத்தின் விமர்சனம் குறித்து காண்போம்.

Bhool Bhulaiyaa 3: திரை விமர்சனம் | Bhool Bhulaiyaa 3 Review

கதைக்களம்

200 ஆண்டுகளுக்கு முன் ரக்த் காத் சாம்ராஜ்யத்தில் பெண்ணொருவருக்கு மன்னர் மரண தண்டனை அளிக்க, இறந்த பெண் ஆவியாக வந்து பழி தீர்க்கிறார்.

அதன் பின்னர் இப்போதைய காலகட்டத்தில், பேய்களை விரட்டுவதாக கூறி ஏமாற்றி சம்பாதிக்கும் ரூ பாபா எனும் ருஹான், ஹீரோயின் மூலம் ரக்த் காத் கிராமத்திற்கு செல்லும் சூழல் ஏற்படுகிறது.

Bhool Bhulaiyaa 3: திரை விமர்சனம் | Bhool Bhulaiyaa 3 Review

அங்கு அரண்மனையில் அடைக்கப்பட்டிருக்கும் மஞ்சுலிகா ஆவியை ருஹான் விரட்ட வேண்டும். ஆனால் ஆவி அடைக்கப்பட்ட கதவின் பூட்டு ஏற்கனவே திறக்கப்பட்டது ஒரு கட்டத்தில் தெரிய வருகிறது.

அதனைத் தொடர்ந்து அரண்மனையில் நடக்கும் அமானுஷ்யங்களுக்கு காரணம் என்ன? ருஹான் வந்த வேலையை முடித்தாரா? என்பதே படத்தின் கதை.  

படம் பற்றிய அலசல்

Bhool Bhulaiyaa இரண்டாம் பாகத்தை இயக்கிய அனீஸ் பஸ்மீதான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். ருஹானாக வரும் கார்த்திக் ஆர்யன் காமெடி கலந்த நடிப்பில் ரசிக்க வைக்கிறார்.

Bhool Bhulaiyaa 3: திரை விமர்சனம் | Bhool Bhulaiyaa 3 Review

Bagheera திரை விமர்சனம்

Bagheera திரை விமர்சனம்

த்ரிப்தி திம்ரி நடிப்பை விட அழகால் பெரிதும் கவர்கிறார். படத்தில் ஆங்கங்கே வரும் ட்விஸ்ட்கள் விறுவிறுப்பை கூட்டுகின்றன. சந்தீப் ஷிரோத்கரின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

இன்டெர்வலில் வரும் ட்விஸ்ட் அருமை. முதல் பாதி கலகலப்பாக செல்ல, இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் சிறப்பு. வித்யாபாலன் நடிப்பில் மிரட்ட, மாதுரி தீக்ஷித் சைலண்டாக ஸ்கோர் செய்கிறார்.

Bhool Bhulaiyaa 3: திரை விமர்சனம் | Bhool Bhulaiyaa 3 Review

இருவருக்குமான நடனத்தில் வரும் போட்டி அழகாக எடுக்கப்பட்டுள்ளது. காமெடிக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் ஹாரர் காட்சிகளுக்கும் இயக்குநர் முக்கியத்துவம் தந்திருப்பதில் ஜெயித்திருக்கிறார்.

கிளைமேக்சில் reveal ஆகும் ட்விஸ்ட் யாரும் யூகிக்க முடியாத ஒன்று. அதேபோல் படத்தின் முடிவும் எமோஷனல் டச். 

க்ளாப்ஸ்

சுவாரஸ்யமான திரைக்கதை

நடிகர்களின் நடிப்பு

ட்விஸ்ட்கள்

பாடல்கள், பின்னணி இசை

பல்ப்ஸ்

பெரிதாக ஒன்றும் இல்லை 

மொத்தத்தில் அரண்மனை, காஞ்சனா, சந்திரமுகி படங்களை விரும்பி பார்த்தவர்கள் கண்டிப்பாக இந்தப் படத்தை குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம். 

Bhool Bhulaiyaa 3: திரை விமர்சனம் | Bhool Bhulaiyaa 3 Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US