வெப் சீரிஸில் நடித்திருக்கும் பிக் பாஸ் தனலட்சுமி! Commoner என சொன்னது எல்லாம் பொய்யா?
பிக் பாஸ் ஷோவில் இந்த வருடம் பிரபலங்கள் மட்டுமின்றி பொது மக்களும் கலந்துகொள்ளலாம் என முதலில் அறிவிக்கப்பட்டது. அந்த வாய்ப்பு மூலமாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர் தான் தனலட்சுமி என கமல்ஹாசனே கூறினார்.
ஏழ்மையான குடும்பத்தில், அப்பா துணை இல்லாமல் அம்மா கஷ்டப்பட்டு வளர்த்தார் என தனலட்சுமி கூறி இருந்தார்.
ஆனால் அவரை பணக்கார வீட்டு பெண் தான், இரண்டு படங்களை சொந்தமாக தயாரித்து நடித்து இருக்கிறார் என்றெல்லாம் அவரது நண்பர்கள் அளித்த பேட்டி சமீபத்தில் வைரல் ஆனது.
வெப் சீரிஸ்
இந்நிலையில் தனலட்சுமி பிக் பாஸ் வரும் முன்பே ஒரு வெப் சீரிஸில் நடித்து இருக்கிறார். விஜய் டிவி நாஞ்சில் விஜயன் உடன் சேர்ந்து அவர் 'வத்திக்குச்சு' என்ற வெப் சீரிஸில் நடித்து இருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தான் commoner என பிக் பாஸில் அவர் சொன்னது எல்லாம் பொய்தானா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
என்றும் இளமையாக காணப்படும் நடிகை நதியாவின் கணவரை பார்த்துள்ளீர்களா?