பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக கலந்து கொள்ளும் விஜய் டிவி-ன் கலக்க போவது யாரு நட்சத்திரம்!
பிக்பாஸ்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம்தோறும் ஒளிபரப்பாகி வரும் முக்கிய பிக்பாஸ்.
ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்து விரைவில் 6-வது சீசன்-ல் அடியெடுத்து வைக்கிறது.
மேலும் ஏற்கனவே இதன் ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது. அக்டோபர் 9-ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 6 தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கலக்க போவது யாரு நட்சத்திரம்
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் குறித்து தொடர்ந்து சில தகவல்கள் பரவி வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6-ல் பிரபல விஜய் டிவி நட்சத்திரம் அமுதவாணன் கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது.
சமீபத்தில் கூட கலக்க போவது யாரு சாம்பியன்ஸ்-ல் டைட்டிலை வென்றார் அமுதவாணன்.
பொன்னியின் செல்வன் முதல் நாள் பிரமாண்ட தமிழக வசூல்