1500 ரூ. சம்பளம், ரயில் நிலையத்தில் தூங்கினேன்: மைனா நந்தினியின் சோக கதை

By Parthiban.A Oct 19, 2022 10:40 AM GMT
Report

விஜய் டிவி சீரியல் நடிகையாக மைனா நந்தினி மிகவும் பிரபலம். அவர் தற்போது பிக் பாஸ் ஆறாம் சீசனில் போட்டியாளராக வந்திருக்கிறார்.

இன்று பிக் பாஸில் அவர் கடந்து வந்த பாதை பற்றி கூறி இருக்கிறார். அப்போது மற்ற போட்டியாளர்கள் பஸ்ஸர் அழுத்தியதால் அவர் முழுமையாக பேசாமல் வெளியில் வந்துவிடுகிறார்.

ரயில் நிலையத்தில் தூங்கினேன்

அதன் பின் மற்ற சில போட்டியாளர்களிடம் பேசிய மைனா நந்தினி தான் ஆரம்பகாலத்தில் சந்தித்த விஷயங்கள் பற்றி கூறி இருக்கிறார்.

சென்னையில் லோக்கல் ரயில் 11 மணிக்கு மேல் வராது என எனக்கு தெரியாது. ஒருமுறை அப்படி ரயில் நிலையத்தில் இரவில் தூங்கினேன்.

அடல்ட் ஷோ

"வாய்ப்புக்காக பல டிவி சேனல்களை அணுகினேன். ஆனால் வாட்ச்மேனை தாண்டி செல்லவே முடியாது. கேட்டிலேயே நிற்கவைத்துவிடுவார்கள். அதன் ஒரு அடல்ட் ஷோ தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் ஷோ அது."

"அந்த ஷோவில் இருந்தால் என் மொத்த இமேஜும் மாறிவிடும் என நண்பர்கள் சொன்ன அட்வைசுக்கு பிறகு ஒரு மாதத்தில் அதில் இருந்து வெளியில் வந்தேன்."

1500 ரூ. சம்பளம், ரயில் நிலையத்தில் தூங்கினேன்: மைனா நந்தினியின் சோக கதை | Bigg Boss 6 Myna Nandhini Struggles In Life

1500 ரூ சம்பளத்தில் சரவணன் மீனாட்சி

"அதன் பின் அதிகம் மெனக்கெட்டு நண்பர்கள் மூலமாக விஜய் டிவி சரவணன் மீனாட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 100 ரூபாய்க்கு 4 ட்ரெஸ் எடுத்து தைத்துக்கொண்டேன். அதை வைத்தே சீரியலை நடித்து முடித்தேன். ரச்சிதாவின் பழைய ட்ரெஸ் எல்லாம் எனக்கு கொடுத்துவிடுவார்."

"அந்த சீரியலில் எனக்கு 1500 ரூ சம்பளம் ஒரு நாளுக்கு தருவார்கள். மாதம் 5 நாள் ஷூட்டிங் இருக்கும். அதை வைத்து 7500 கிடைக்கும்.

அப்போது ஒரு அஸ்பேஸ்ட்டாஸ் சீட் வீட்டில் வாடகைக்கு சென்றேன். அப்பா ஹைதராபாத்தில் இருந்து இங்கே வந்துட்டார். இருவரும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் தான் சந்திப்போம்.

இப்படி ஆரம்பகாலகட்டத்தில் சந்தித்த பிரச்சனைகள் பற்றி மைனா நந்தினி கூறி இருக்கிறார்.

1500 ரூ. சம்பளம், ரயில் நிலையத்தில் தூங்கினேன்: மைனா நந்தினியின் சோக கதை | Bigg Boss 6 Myna Nandhini Struggles In Life

இதனால் தான் பிக் பாஸ் வந்தேன்

நான் இப்போ வெளியே போனால் கூட.. 'நீங்க எங்கயோ மிஸ் ஆகிட்டீங்க மைனா' என பலரும் சொல்வார்கள். இப்போது ஏன் பிக் பாஸ் வந்தேன் என்றால் இது தான் காரணம் என மைனா நந்தினி கூறி இருக்கிறார்.  

23 வயதான இளம் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட 56 வயது நடிகர் பப்லு 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US