23 வயதான இளம் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நடிகர் பப்லு!
பப்லு பிரித்விராஜ்
திரைப்படங்கள் மற்றும் சீரியல் என மக்களிடையே பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் பப்லு பிரித்விராஜ்.
சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பப்லு. இப்போதும் தான் ஆரோக்கியமாக இருக்க காரணம் தனது மனைவி தான் என ஒரு இளம் பெண்ணை மேடை ஏற்றினாராம்.
பப்லுக்கு ஏற்கனவே பீனா என்பவருடன் திருமணமாகி 25 வயதில் ஒரு மகன் இருக்கிறார், அவரின் மகன் அஹத் ஆட்டிசம் குறையாடு உடையவர். இதனிடையே தற்போது ஒரு இளம் பெண்ணை மனைவியென நடிகர் பப்லு கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இரண்டாவது திருமணம்
மேலும் இது குறித்து வெளியான தகவலில், பப்லு மற்றும் அவரின் மனைவி பீனாவுக்கும் கருதுவேறுபாடுகள் ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் தான் பப்லுவுக்கு மலேசியாவை சேர்ந்த ஒரு பெண் நட்பாகி இருக்கிறார்.
மலேசியாவில் பப்லு தனது தொழிலை தொடங்க அவர் தான் உதவியாக இருந்தராம். மேலும் சில மாதங்களுக்கு முன்பு தான் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் மனைவி பிரிந்த நிலையில் அவரின் மகனை நடிகர் பப்லு தான் பார்த்து கொண்டு வருகிறாராம்.
சூர்யாவை விட கடும் ஒர்கவுட் செய்யும் நடிகை ஜோதிகா