அதுக்கு பெரிய டீம் இருக்கு.. குயின்சி இப்படித்தான் இத்தனை நாள் எலிமினேஷனில் இருந்து தப்பினாரா!
பிக் பாஸ் 6ம் சீசனில் இந்த வாரம் குயின்சி தான் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த வாரம் அவருக்கு தான் மிக குறைந்த வாக்குகள் கிடைத்து இருக்கிறது.
இந்த எலிமினேஷன் எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும், குயின்சி எப்படி 50 நாட்கள் வரை பிக் பாஸில் தாக்குப்பிடித்தார் என்பது பற்றி தற்போது பேச்சு எழுந்திருக்கிறது.
அவர் பிக் பாஸ் வரும் முன்பே தனக்காக பணியாற்ற ஒரு பெரிய டீமை வைத்துவிட்டு தான் வந்திருக்கிறார். அதற்காக அவர் அதிகம் செலவும் செய்திருக்கிறார் என தெரிகிறது.
எனக்கு டீம் இருக்கு..
சில வாரங்களுக்கு முன்பு அவர் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்ட போது 'எனக்காக work பண்றவங்களுக்கு நன்றி' என கூறி ஷோவிலேயே அவர்களுக்கு நன்றி கூறி இருந்தார்.
மேலும் அதன்பின் மணிகண்டன் உடன் பேசும்போது தனக்கு டீம் இருக்கிறது, அவர்கள் உனக்காகவும் வேலை செய்துகொண்டிருப்பார்கள் என கூறி இருக்கிறார்.
குயின்சி மட்டுமின்றி பல போட்டியாளர்கள் இப்படி செய்கிறார்கள் என சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Ennadhu “En team ellam unaku dhan work pannitu iruppanga!” va!!! ?#Queency admitting she has got a team working for her!
— Madhu (@Madziedee) November 22, 2022
Adapaavigala! ?
.#QuotaQueency #BiggBossTamil6 #BiggBossTamil #Mani
Source/Video credits: @vijaytelevision & @disneyplusHSTam pic.twitter.com/riGiSruB6z
மூன்று திரைப்படத்தில் மட்டுமே நடித்துள்ள நடிகை பிரியங்கா மோகன் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா