பிக்பாஸ் 6வது சீசனில் டுவிட்டரை சூடேற்றும் இந்த நாயகிகளா?- தற்போதைய தகவல்
பிக்பாஸ் 6வது சீசன்
விஜய் தொலைக்காட்சியில் 2017ம் ஆண்டு ஜுன் மாதம் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது ஏகப்பட்ட பிரச்சனைகள், சர்ச்சைகள் எழும்பின.
ஆனால் அதன்பிறகு அடுத்தடுத்து 5 சீசன்கள் சுமூகமாக முடிந்துவிட்டது, அடுத்து 6வது சீசனிற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
ஆரவ், ரித்திகா, முகென், ஆரி, ராஜு ஜெயமோகன் என 5 பேரும் 5 சீசன் வெற்றியாளர்கள். பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியும் நடந்தது, அதன் வெற்றியாளராக பாலாஜி முருகதாஸ் அறிவிக்கப்பட்டார்.
போட்டியாளர்கள்
6வது சீசன் வரும் அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கும் என இதுவரை கூறப்படுகிறது, ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை. அதேபோல் போட்டியாளர்கள் குறித்து நாளுக்கு நாள் ஒவ்வொரு பிரபலங்களின் பெயர்கள் இடம்பெறுகின்றன.
தொகுப்பாளர் ரக்ஷன், ஸ்ரீநிதி, பாடகி ராஜலட்சுமி என இவர்களின் பெயர்கள் அடிபட தற்போது பல போட்டோ ஷுட்கள் மூலம் சமூக வலைதளத்தை சூடேற்றும் தர்ஷா குப்தா மற்றும் ஷில்பா மஞ்சுநாத் 6வது சீசனில் கலந்து கொள்ள போகிறார்கள் என்கின்றனர்.
தனுஷின் திருச்சிற்றம்பலம் 4 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் செய்த மொத்த வசூல்- எவ்வளவு தெரியுமா?