ரச்சிதா முன் அசிங்கப்பட்ட ராபர்ட் மாஸ்டர்.. வெயிட் என்ன என கேட்டு கலாய்த்த பிக் பாஸ்
ராபர்ட் மாஸ்டர்
பிக் பாஸ் ஷோவில் ராபர்ட் மற்றும் ரச்சிதா பற்றி தான் அதிகம் பேச்சு வருகிறது. அதற்கு காரணம் ராபர்ட் மாஸ்டர் காதலிப்பதாக சொல்லி தொடர்ந்து ரச்சிதா பின்னால் சுற்றிக்கொண்டிருப்பது தான்.
ரச்சிதா என்னிடம் பேசவில்லை என்றால் நான் சாப்பிடமாட்டேன் என சொல்லி ஒரு நாள் முழுக்க ராபர்ட் மாஸ்டர் இருக்க, அது ரொம்ப தவறு என ரச்சிதா எச்சரித்து இருக்கிறார்.
டாஸ்கில் அசிங்கப்பட்ட ராபர்ட்
பிக் பாஸில் நேற்று சுற்றும் மேடையில் நிற்கும் டாஸ்க் நடந்தது. அதில் ராபர்ட் மாஸ்டர் அதில் நிற்க, அமுதவாணன் மட்டும் சுற்றினார்.
அப்போது இரண்டு சுற்று சுற்றியதும் அந்த மேடையே எடை தாங்காமல் உடைத்துவிட்டது. அதை பார்த்த பிக் பாஸ் 'ராபர்ட் என்ன வெயிட் நீங்க' என கேட்டு கலாய்த்தார். உள்ளே வரும்போது 92 கிலோ என சொல்லி ராபர்ட் சமாளித்தார்.
அதன் பின் அந்த சக்கரம் சரி செய்யப்பட்டு இன்று காலை மீண்டும் அந்த டாஸ்க் நடந்து முடிந்தது.
கண்கலங்கி பேசிய விஜய் டிவி பிரியங்கா! பிக் பாஸ் போனதே தப்பு, ஆனால்..