கண்கலங்கி பேசிய விஜய் டிவி பிரியங்கா! பிக் பாஸ் போனதே தப்பு, ஆனால்..
பிரியங்கா
விஜய் டிவி பிரியங்காவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சின்னத்திரையில் தற்போது இருக்கும் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் அவர். மாகாபா ஆனந்த் உடன் சேர்ந்து அவர் விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் ஷோக்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகின்றன.
பிக் பாஸ் சென்றபோது பிரியங்காவின் பெயர் சற்று டேமேஜ் ஆகி இருந்தாலும் அதற்கு பிறகு மீண்டும் தொகுப்பாளராக விஜய் டிவி ரசிகர்களை ஈர்த்துவிட்டார் பிரியங்கா.
கண்ணீர் வீடியோ
இந்நிலையில் பிரியங்கா சமீபத்தில் மலேஷியா சென்று இருக்கிறார், அங்கு அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள். அவ்வளவு அன்பை நான் எதிர்பார்க்கவே இல்லை என வீடியோவில் தெரிவித்து இருக்கிறார் பிரியங்கா.
பிக் பாஸ் சென்றதே தவறு என யோசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இவர்கள் இப்படி அன்பு காட்டியது நெகிழ்ச்சியாக இருந்தது என பிரியங்கா மேலும் கூறி இருக்கிறார்.
இதை கூறும்போது அவர் கண்கலங்கி பேசி இருக்கிறார். வீடியோவில் நீங்களே பாருங்க.
Also read: மருத்துவமனையில் கமல்ஹாசன்.. பிக் பாஸ் இந்த வாரம் யார் தொகுப்பாளர்?