டபுள் எலிமினேஷன்.. போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்த கமல்
பிக் பாஸ் ஷோ 8 வாரங்களை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை எல்லா வாரமும் வாக்குகள் அடிப்படையில் வாரம் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டு வருகிறார்கள்.
இன்றைய எபிசோடில் குயின்சி தான் எலிமினேட் ஆவதாக கமல் அறிவித்தார். அதை வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்களும் எதிர்பார்த்த ஒன்று தான் என்பதால் எல்லோரும் மகிழ்ச்சியாகவே அவர் வழியனுப்பி வைத்தனர்.
அடுத்த வாரம் டபுள் எலிமினேஷன்
குயின்சி வெளியில் வந்த பிறகு கமல்ஹாசன் மற்ற போட்டியாளர்களுக்கு ஒரு ஷாக்கிங் செய்தியை கூறினார்.
அடுத்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கும் என்பது தான் அது. அந்த இரண்டு பேர் யார் என தற்போதே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இன்று நாமினேஷன் லிஸ்ட் வெளியான பிறகு தான் எலிமிநேஷனை கணிக்க முடியும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த போட்டோவில் குழந்தையாக இருக்கும் இளம் ஹீரோயின் யார் தெரியுமா?