முடிவுக்கு வந்த குக் வித் கோமாளி! அடுத்து பிக் பாஸ் தொடங்கும் தேதி இதோ
விஜய் டிவியில் டிஆர்பிக்காக பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கடந்த ஐந்தாறு மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி 3ம் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது .
அந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி கடந்த ஞாயிறு அன்று ஒளிபரப்பானது. அதில் ஸ்ருத்திகா டைட்டில் ஜெயித்து ஐந்து லட்சம் ருபாய் பரிசை ஜெயித்தார். இரண்டாம் இடம் தர்ஷனுக்கு கிடைத்தது. அவருக்கு 3 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்தது.
குக் வித் கோமாளி தற்போது முடிவுக்கு வந்திருக்கும் சூழலில் அடுத்து பிக் பாஸ் 6ம் சீசன் எப்போது தொடங்கும் என்று தான் ரசிகர்கள் தற்போது கேட்க தொடங்கி இருக்கின்றனர்.
வந்திருக்கும் தகவல்களின்படி பிக் பாஸ் 6 வரும் அக்டோபர் 2ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கும் என தெரிகிறது. கமல்ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருக்கிறார்.