பிக்பாஸ் 7வது சீசனில் யுகேந்திரன் கலந்துகொண்டதே இதற்காக தான்- அவரது மனைவி ஓபன் டாக்
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7வது சீசனில் ரசிகர்களுக்கு பரீட்சயமான பிரபலங்களில் ஒருவர் தான் யுகேந்திரன்.
மறைந்த பிரபலம் மலேசியா வாசுதேவன் அவர்களின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர் என கலக்கி வந்தவர் யுகேந்திரன்.
இவர் திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் செட்டில் ஆகி இருந்தார், ஆனால் சினிமா பிரபலங்களுடன் டச்சில் இருந்துள்ளார்.
பிரபலத்தின் மனைவி
யுகேந்திரன் பிக்பாஸ் 7வது சீசன் வந்தது குறித்து அவரது மனைவி ஹேம மாலினி ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர், பிக்பாஸில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததும் முதலில் வெங்கட் பிரபு மற்றும் சரண் ஆகியோரிடம் தான் கூறியுள்ளார்.
இருவரும் இதில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறினார்கள், பிறகு சரி பார்த்து இருந்துட்டு வா என அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சீசனில் ரசிகர்களுக்கு பிரபலமான இளம் தலைமுறையினர் அதிகம் இருப்பதால் யுகேந்திரன் சீக்கிரமாக வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
தன்னைப் பற்றி ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தான் அவர் பிக்பாஸ் வந்துள்ளார் என கூறியுள்ளார்.