என் ஜாதி என்னனு கேட்குறான்.. சர்ச்சை புகார் சொன்ன பிக் பாஸ் மாயா
பிக் பாஸ் 7ம் சீசன் தொடங்கி சில வாரங்கள் தான் ஆகிறது என்றாலும் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் வந்து பரபரப்பாக ஷோ சென்று கொண்டிருக்கிறது.
இன்று முதல் முறையாக ஓபன் நாமினேஷன் நடந்தது. அதில் பலரும் மாயா மீது புகார் சொல்லி நாமினேட் செய்தனர். நாமினேஷன் நடைபெறும்போதே மணிச்சந்திரா உடன் மாயாவுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
ஜாதி என்னனு கேக்குறான்..
அதன் பின் மற்றவர்களிடம் பேசும்போது மாயா ஒரு அதிர்ச்சி புகாரை கூறினார். 'உன் ஜாதி என்னனு கேக்குறான். அது பெரிய தப்பு, அதற்கு மன்னிப்பே இல்லை' என மணிச்சந்திரா மீது புகார் கூறினார்.
அதன் பின் ஜோதிகா இது பற்றி மணியிடம் சென்று கேட்க, 'எல்லோரும் சிக்கன் சாப்பிடும்போது மாயா மட்டும் பீஸ் போட்டுக்கொள்ளாமல் வெறும் கிரேவி மட்டும் போட்டு சாப்பிட்டார். அதை பார்த்து ஏன் சாப்பிட மாட்டியா.. என் என்ன பிராமினா என கேட்டேன் அவ்வளவு தான்' என விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
![ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி](https://cdn.ibcstack.com/article/a97f3756-140f-4d89-8c0b-25cc64bab4c2/25-67a5e0a7da8d6-sm.webp)
ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி News Lankasri
![என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு](https://cdn.ibcstack.com/article/4b43851d-4e68-44ab-9f9b-9185768e4a3f/25-67a592984dcbc-sm.webp)