இது எங்கே கொண்டு போய் விடுமோ.. மாயா - நிக்சன் பற்றி வந்த புகார்! என்ன செய்வார் கமல்?
பிக் பாஸ் வீட்டில் வாரம்தோறும் போட்டியாளர்களுக்கு நடுவில் இருக்கும் பிரச்சனைகள் மாறிக்கொண்டே இருக்கிறது. Bully கேங் என ட்ரோல் செய்யப்படும் மாயா கேங் மற்றும் விசித்ரா கேங் இடையே தான் தொடர்ந்து சலசலப்பு இருந்து கொண்டே இருக்கிறது.
ஆனால் கமலும் மாயா க்ரூப்பை அதிகம் விமர்சித்ததில்லை. அவர்களுக்கு கமல் ஆதரவாக பேசுகிறார் என கடந்த சில வாரங்களாக நெட்டிசன்கள் கமலையும் மோசமாக வறுத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.
இன்று சனிக்கிழமை எபிசோடில் கமல் பேசும்போது 'இது எங்கே கொண்டு போய் விடுமோ' என பிக் பாஸ் வீட்டில் மாறும் கூட்டணிகள் பற்றி பேசி இருக்கிறார்.
மாயா, நிக்சன் பற்றி புகார்
கூல் சுரேஷை திட்டியது யார் என கமல் கேட்க, விஷ்ணு, மணி ஆகியோரது பெயரை கூறுகிறார். ஆனால் அதை சொன்னது மாயா தான் என உண்மையை போட்டுடைக்கிறார் மணி.
அதன் பின் நிக்சன் சார் என் கேரக்டரை பற்றி தவறாக பேசுகிறார் என விசித்ரா கூறுகிறார். அதன் பின் ஆடியன்ஸ் கைதட்டுவது ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
அதனால் மாயா, நிக்சன் ஆகியோர் மீது வந்த புகார்களை பற்றி கமல் என்ன செய்திருப்பார் என்பதை எபிசோடு வரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.