பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பைனலிஸ்ட் இவரா.. மூன்று வாரங்களுக்கு முன் மோசமான போட்டியாளர் என பேர் எடுத்தவர்
இந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டு பினாலே நடைபெற்று வந்தது. அர்ச்சனா மற்றும் விஜய் வர்மாவை தவிர்த்து மீதம் இருந்த 8 போட்டியாளர்களும் இந்த டிக்கெட் டு பினாலே டாஸ்கில் பங்கேற்று போட்டியிட்டனர்.
முதல் பைனலிஸ்ட்
இதில் இறுதியாக நடைபெற்ற டாஸ்கில் அதிக மதிப்பெண்களை எடுத்து முதலிடத்தை பிடித்துள்ளார் விஷ்ணு. இதன்மூலம் விஷ்ணு தான் டிக்கெட் டு பினாலே சுற்றை வென்றுள்ளார் என தெரிகிறது. மேலும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் முதல் பைனலிஸ்ட்டாகவும் தேர்வாகியுள்ளார்.
மோசமான போட்டியாளர்
மூன்று வாரங்களுக்கு முன் மோசமான போட்டியாளர் என ரசிகர்களால் பார்க்கப்பட்ட விஷ்ணு அதன்பின் தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டு தற்போது டிக்கெட் டு பினாலே சுற்றில் வெற்றிபெற்று முதல் பைனலிஸ்ட்டாக மாறியுள்ளார்.
இதன்மூலம் தான் ஒரு வலிமையான போட்டியாளர்கள் என ரசிகர்களுக்கு காட்டியுள்ளார் விஷ்ணு என்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணுவை தொடர்ந்து வேறு யார்யாரெல்லாம் இறுதி போட்டிக்கு செல்ல போகிறார்கள் என அடுத்த வாரம் இறுதியில் தெரிந்துவிடும். அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
