விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் 7ல் இப்படி ஒரு பிரச்சனையா
பிக் பாஸ் ஷோ என்றாலே தமிழ்நாட்டில் மிக பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதற்கு முன்பு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பாப்புலர் ஆனவர்கள் பலர். குறிப்பாக மாடலிங் துறையில் இருந்து வரும் பலரும் பாப்புலர் ஆகி இருக்கின்றனர்..
விரைவில் தமிழில் பிக் பாஸ் 7ம் சீசன் தொடங்க இருக்கிறது. போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் எகிறிக்கொண்டிருக்கிறது.
ஆர்வம் காட்டாத நடிகைகள்
பிக் பாஸ் ஷோ தொடங்கிய புதிதில் கலந்துகொண்ட பல நடிகைகள் புகழின் உச்சிக்கே சென்று இருக்கின்றனர். குறிப்பாக ஓவியா, லாஸ்லியா உள்ளிட்டவர்கள் புகழ் பெற்றது உங்களுக்கு நினைவிருக்கும்.
ஆனால் தற்போது இளம் நடிகைகள் பிக் பாஸ் ஷோவில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது. ஷோவில் பங்கேற்கும் நடிகைகள் பிரபலம் ஆனலும் அதன் பின் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் இருப்பது தான் அதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
இப்படி ஓவியா, லாஸ்லியா, சனம் ஷெட்டி என பல நடிகைகளுக்கு சினிமா வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை. நடிகர்களுக்கும் அதே நிலை தான் இருக்கிறது. அது மட்டுமின்றி பிக் பாஸில் நடிகர்கள் எதாவது சின்ன தவறு செய்தாலும் பெரிய அளவில் ட்ரோல்களை சந்திக்க வேண்டி இருக்கும்.
இந்த காரணங்களால் தற்போது இளம் நடிகைகள் பிக் பாஸ் வர ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.
விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்.. யார் தெரியுமா