பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. கோப்பையை தட்டி தூக்கிய நட்சத்திரம்.. வீடியோ இதோ
சின்னத்திரையில் பிரமாண்டமாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதனுடைய 7வது சீசன் தற்போது தமிழில் நடைபெற்று வருகிறது. இதுவரை 77 நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் சில வாரங்களில் பைனல் வரவிருக்கிறது.
பிக் பாஸ் 7
ஆனால், தெலுங்கில் நேற்று தான் பிக் பாஸ் பைனல் நடந்து முடிந்துள்ளது. நாகர்ஜுனா தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 7ன் இறுதி போட்டி யார் வெல்ல போகிறார்கள் என ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது.
இதில் பல்லவி பிரஷாந்த் மற்றும் அமர்தீப் ஆகிய இரண்டு போட்டியாளர்களில் யார் அந்த கோப்பையை தட்டி செல்ல போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது.
டைட்டில் வின்னர்
இருவரில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்ற பல்லவி பிரஷாந்த் என்பவர் பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் ஆனார்.
டைட்டில் வென்ற பல்லவி பிரஷாந்துக்கு பரிசு தொகையாக ரூ. 35 லட்சம் வழங்கப்பட்டது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இதோ அந்த டைட்டில் வின்னிங் வீடியோ..
#PallaviPrashanth is the Season 7 WINNER.
— BiggBossTelugu7 (@TeluguBigg) December 17, 2023
Congratulations ???#Amardeep ended as Runner-up. ??#BiggBossTelugu7 #BiggBossTelugu7GrandFinale #BiggBoss7Telugu #Nagarjuna pic.twitter.com/4ZoIFpWBvI