பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இதோ
டைட்டில் வின்னர் விஜே அர்ச்சனா
சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான விஜே அர்ச்சனா தற்போது பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார். வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த விஜே அர்ச்சனாவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் இவருடைய செயல் ரசிகர்களை கவர துவங்கிய நிலையில், அதிக வாக்குகளை பெற்று பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார். விஜே அர்ச்சனா டைட்டில் வென்றதன் மூலம் அவருக்கு ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

இதுமட்டுமின்றி ரூ. 15 லட்சம் மதிப்புள்ள ஒரு பிளாட் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்பு ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.
அர்ச்சனா வாங்கிய சம்பளம்
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க விஜே அர்ச்சனா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜே அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க ஒரு நாளுக்கு ரூ. 20 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி 28வது நாளில் வைல்டு கார்டு எண்ட்ரியாக தான் விஜே அர்ச்சனா உள்ளே வந்தார். அதன்படி 77 நாட்கள் வீட்டிற்குள் இருந்துள்ள அர்ச்சனாவிற்கு ரூ. 15 லட்சத்து 40 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

பரிசு தொகை ரூ. 50 லட்சம், பிளாட் மற்றும் கார் மதிப்பு ரூ. 30 லட்சம், சம்பளம் ரூ. 15 லட்சத்து 40 ஆயிரம் என ஆக மொத்தம் ரூ. 95 லட்சத்தை தனது வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார் அர்ச்சனா.
முதல்வர் விஜய்யை சந்தித்த விஷால்: வித்தியாசமான பரிசால் சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு! IBC Tamilnadu
முதல்வர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த சிம்ரன்... அடுத்தடுத்து ரசிகர்கள் எழுப்பிய கேள்வி IBC Tamilnadu
கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! IBC Tamilnadu
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri