நிக்சன் பிரச்சனையை வைத்தே ஸ்கோர் பண்ணிட்டீங்க- அர்ச்சனாவிடம் வினுஷா கேட்ட அதிரடி கேள்வி
பிக்பாஸ் 7
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 7 படு ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி தற்போது 100 நாட்களை எட்டிவிட்டது.
நிகழ்ச்சியும் இறுதிக்கட்டத்தை எட்ட இதுவரை வெளியேறிய சில போட்டியாளர்கள் தற்போது வீட்டிற்குள் வந்துள்ளனர். அப்படி மீண்டும் வீட்டிற்குள் வந்த வினுஷா அனைவரிடமும் சந்தோஷமாக சிரித்து பேசி இருக்கிறார்.
பின் அர்ச்சனாவிடம் தனியாக வந்து சில விஷயங்கள் குறித்து பேசுகிறார்.
புரொமோ
வினுஷா, அர்ச்சனாவிடம், உங்களுக்கு ஒரு பிரச்சனை என்று வரும் போது என் பெயரை யூஸ் பண்ணி விளையாடி இருக்கிறீர்கள்.
நீங்கள் எனக்கு நியாயம் பேசுவதென்றால் அதை முன்னாடியே செய்திருக்கலாமே? என்று வினுஷா கேட்டவுடன் அர்ச்சனா, நான் சின்ன பிள்ளைத்தனமாக பண்ணி விட்டேன் என்று கூறுகிறார். ஆக மொத்தம் என்னுடைய பெயர் தான் கெட்டுப் போகுது என்று வினுஷா பேசி இருக்கிறார்.