முத்துக்குமரனை தாண்டி Finalistஆக இருந்த மற்ற போட்டியாளர்களின் சம்பள விவரம்... முழு தகவல்
பிக்பாஸ் 8
பிரம்மாண்டத்தின் உச்சம், ரசிகர்கள் பெரிதும் கொண்டாடிய பிக்பாஸ் 8வது சீசன் இந்த வாரத்துடன் முடிவுக்கு வரப்போகிறது.
முத்துக்குமரன், சௌந்தர்யா, பவித்ரா, விஷால், ராயன் ஆகிய 5 பேர் பைனலிஸ்ட்டாக தேர்வானார்கள், இதில் ராயன் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக உள்ளே வந்தவர்.
பிக்பாஸ் 8வது சீசன் டைட்டிலையும் எல்லோரும் எதிர்ப்பார்த்த முத்துக்குமரன் ஜெயித்துள்ளாராம்.
இவருக்கு கோப்பையுடன் ரூ. 40 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறதாம்.
மற்றவர்கள் சம்பளம்
கோப்பையை வென்ற முத்துக்குமரனை தாண்டி பைனலிஸ்ட்டாக இருந்த விஷால், சௌந்தர்யா, பவித்ரா, ரயான் ஆகியோரின் சம்பளம் விவரத்தை காண்போம்.
சௌந்தர்யா மற்றும் விஜே விஷால் இருவரும் ஒரு வாரத்திற்கு ரூ. 1 லட்சம் சம்பளம் பேசப்பட்டு உள்ளே வந்துள்ளனர்.
பவித்ரா, பிக்பாஸ் 8 வீட்டிற்குள் ஒரு நாளைக்கு ரூ. 20 முதல் ரூ. 25 ஆயிரம் பேசப்பட்டு உள்ளே சென்றதாக கூறப்படுகிறது.
ரயான் ஒரு நாளைக்கு ரூ. 12 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்றுள்ளாராம்.