பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட காதலி, 5 முறை தற்கொலை முயற்சி... தனது சோக கதையை சொன்ன பிக்பாஸ் பிரபலம்
பிக்பாஸ் 8
விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 8வது சீசன் விறுவிறுப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கிறது.
போட்டியாளர்களுக்குள் சண்டை, போட்டி, பொறாமை, கலாட்டா, பிரச்சனை என எல்லாம் கலந்த கலவையாக நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.
இந்த பிக்பாஸ் 8வது சீசனில் இருந்து இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறியுளளார்கள்.
எமோஷ்னல்
இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வந்த பாதை டாஸ்க் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்கள் வாழ்க்கையில் எதிர்க்கொண்ட கஷ்டங்களை பற்றி மனம்விட்டு பேசியுள்ளனர். அதில் சத்யா கூறிய விஷயம் கேட்டு அனைவருமே கண்கலங்கிவிட்டனர்.
சத்யா கூறுகையில், நான் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தேன், 5ம் வகுப்பு படிக்கும் போது பெற்றோர் பிரிந்துவிட்டனர். பாட்டி வீட்டில் வளர்ந்தேன், ஆனால் அவருக்கு வயது ஆனதால் என்னை கவனித்துக்கொள்ள முடியவில்லை.
எனவே போர்டிங் ஸ்கூலில் சேர்த்தனர், அங்கு ஒரு பெண் மீது காதலில் விழுந்தேன், அது கல்லூரி சென்றபோதும் தொடர்ந்தது. பெண் வீட்டில் விஷயம் தெரியவர அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்.
அப்போது திடீரென ஒரு போன் கால், அவள் இறந்துவிட்டாள் என்று சொன்னார்கள். எனது முதல் காதலி என்னிடம் அனுமதி வாங்கிவிட்டு தான் ஒரு இடத்திற்கு சென்றால் அங்கு சிலர் அவளை பாலியல் பலாத்காரம் செய்து, அவளை அபியூஸ் பண்ணி ஒரு ரயில்வே டிராக்கில் தூக்கி போட்டுட்டாங்க.
அந்த பிரிவை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, அதன்பின் நான் 5 முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளேன். இது கோழைத்தனம் தான், ஆனால் பெற்றோர்கள், காதலி என எல்லோரும் என்னை விட்டு சென்ற கவலை.
இதனால் போதைக்கு அடிமையான எனக்கு சினிமா மாற்றத்தை கொடுத்தது. அதன்பின் எனக்கு இன்னொரு காதல் வந்தது, அவர் தான் எனது மனைவி ரம்யா.
அவரது பேச்சின் கடைசியில், பெற்றோர்கள் சாதாரணமாக பிரிந்து போய்டலாம், ஆனால் அவர்களின் குழந்தையின் மனநிலையை பற்றி யோசித்து எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என கூறி பேச்சை முடித்துள்ளார்.

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
