சாண்டி மாஸ்டருக்காக பிக்பாஸ் 9 புகழ் கானா வினோத் கொடுத்த பரிசு... வீடியோவுடன் இதோ
பிக்பாஸ் 9
கடந்த வருடம் அக்டோபர் 5ம் தேதி தொடங்கப்பட்ட இந்த பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோ 105 நாட்கள் ஓடிய பிறகு வெற்றிகரமாக 2026 பொங்கலுக்கு முடிவுக்கு வந்தது.
24 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த சீசனை திவ்யா கணேஷ் வென்றார், முதல் ரன்னர் அப்பாக சபரிநாதன் ஜெயித்தார்.
இந்த 9வது சீசன் ஆரம்பமாகும் போது கொஞ்சம் டல் அடித்தாலும் 4 பேரின் வைல்ட் கார்டு என்ட்ரிக்கு பிறகு பரபரப்பாக ஓடியது.

கானா வினோத்
9வது சீசனின் வெற்றியாளராக திவ்யா ஜெயித்தாலும் கானா வினோத் ஜெயிக்க வேண்டும் என ஆசைப்பட்டவர்கள் பலர் உள்ளனர். அவர் ரூ. 18 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல எடுத்த முடிவு அனைவருக்குமே ஷாக்கிங்காக இருந்தது.

பிக்பாஸ் முடிந்து அவரவர் வேலைகளை கவனிக்க தொடங்க கானா வினோத் சாண்டி மாஸ்டர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு அழகிய பரிசு ஒன்று கொடுத்துள்ளார். சாண்டி மாஸ்டரும் அவரத மகளும் இருக்கும் அழகிய புகைப்படம் அது.
இதோ வீடியோவுடன்,