பிக்பாஸ் 9 நிகழ்ச்சியின் 4 பைனலிஸ்ட் சம்பளம் எவ்வளவு தெரியுமா?... அடேங்கப்பாக திவ்யாவிற்கு இவ்வளவா?
பிக்பாஸ் 9
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டத்தின் உச்சமாக கடந்த 100 நாட்களாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ் 9.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற பலர் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர்கள் தான்.
அதிகம் சின்னத்திரை கலைஞர்கள் பங்குபெற்ற இந்த ஷோ முடிவுக்கும் வந்துவிட்டது. பிரபல சீரியல் நடிகை திவ்யா கணேஷ் பிக்பாஸ் 9வது சீசன் டைட்டிலை தட்டிச்சென்றார். அவருக்கு ரூ. 50 லட்சம் பணத்துடன் சில விலையுயர்ந்த பரிசுகளும் கிடைத்தது.

சம்பளம்
சரி திவ்யா கணேஷ் வெற்றிப்பெற்றுவிட்டார், நிறைய பரிசுகளும் கிடைத்துவிட்டது. சரி அவருடன் பைனலிஸ்ட்டாக இருந்த சபரி, விக்ரம், அரோரா பிக்பாஸ் 9 வீட்டில் 100 நாட்கள் விளையாடியதற்காக எவ்வளவு சம்பளம் பெற்றார்கள் என்பதை காண்போம்.
கடைசியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அரோரா 105 நாட்கள் இருந்துள்ளார். ஒரு நாளைக்கு ரூ. 12 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில் ரூ. 12 லட்சத்து 60 ஆயிரம் சம்பளம் பெறுகிறாராம்.
யூடியூபர், ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறியப்பட்ட விக்கல்ஸ் விக்ரம் 105 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விளையாடியதற்காக ரூ. 15 ஆயிரம் சம்பளம் என்ற முறையில் ரூ. 15 லட்சத்து 75 ஆயிரம் சம்பளம் எனப்படுகிறது.

சபரி, விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன், பொன்னி தொடர்கள் மூலம் பிரபலமானவர். இவருக்கு ரூ. 20 ஆயிரம் ஒரு நாளைக்கு சம்பளம் என பேசப்பட 105 நாட்களுக்கு அவர் ரூ. 21 லட்சம் சம்பளம் பெறுகிறாராம்.
திவ்யா கணேஷ், பிக்பாஸ் 9வது சீசனின் டைட்டில் வின்னர். இவர் ஒரு நாளைக்கு ரூ. 30 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு 77 நாட்களுக்கு ரூ. 23 லட்சத்து 10 ஆயிரம் சம்பளமாக வாங்கி இருக்கிறார்.