சற்றுமுன் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்! முதல் வாரத்திலேயே அதிர்ச்சி
பிக் பாஸ் 9ம் சீசன் தமிழில் தொடங்கி இன்றோடு 5 நாட்கள் ஆகிறது. மொத்தம் 20 போட்டியாளர்கள் ஷோவில் நுழைந்து இருக்கின்றனர்.
முதல் நாளில் இருந்தே சண்டை சச்சரவு, ஈகோ, போட்டி என பல விதமான சம்பவங்களும் நடந்து வருகிறது. மேலும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அவர்கள் வாழ்க்கையில் பட்ட கஷ்டத்தை கதையாக கூறி வருகின்றனர்.
வெளியேறிய போட்டியாளர்
நேற்று நந்தினி என்ற போட்டியாளர் anxiety உடன் கண்ணீர் விட்டு கதறி மற்ற போட்டியாளர்கள் எல்லோரிடமும் கத்தி அதிர்ச்சி கொடுத்தார். அவர் பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியவில்லை என கூறி இருந்தார்.
இந்நிலையில் தற்போது நந்தினி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார். முதல் வார எலிமினேஷனுக்கு முன்பே ஒரு போட்டியாளர் வெளியேறியது ஷோ ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.