பிக் பாஸ் 9 டைட்டில் வின்னர் இவர்தானா..? கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்ட தகவல்
பிக் பாஸ் 9
பிக் பாஸ் 9ல் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்றது. இதில் ரூ. 18 லட்சம் பணம் உயர்ந்தபோது அந்த பணப்பெட்டியை கானா வினோத் எடுத்து, வீட்டை விட்டு வெளியேறினார். இவர் வெளியேறியதன் பின் தற்போது சபரி, விக்ரம், அரோரா, திவ்யா, சாண்ட்ரா என ஐந்து போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்ற சாண்ட்ரா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனால் சபரி, விக்ரம், அரோரா, திவ்யா ஆகிய நால்வரும் பிக் பாஸ் 9 பைனலிஸ்ட் ஆகியுள்ளனர். இந்த நால்வரில் இருந்து ஒருவர் பிக் பாஸ் 9 டைட்டில் வெல்லப்போகிறார்.
டைட்டில் வின்னர்
இந்த நிலையில், இந்த நான்கு பேரில் திவ்யாவுக்குதான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது, அவர்தான் பிக் பாஸ் 9 டைட்டில் வெல்லப்போகிறார் என ரசிகர்கள் சிலர் கூறி வருகிறார்கள்.

ஆனால், பைனலில் என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ரசிகர்கள் கூறுவதுபோல் நடக்கப்போகிறதா? அல்லது வேறு யாராவது டைட்டில் வின்னர் ஆகப்போகிறார் என்பதை காத்திருந்து பார்ப்போம்.