பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் திடீர் மாற்றம்! வெளியான அதிர்ச்சியளிக்கும் தகவல்
பிக்பாஸ்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6.
மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமின்றி ஹாட்ஸ்டாரிலும் 24 மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் இரண்டு வாரங்களை கடந்துள்ள இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஆர்வத்தை கூட்டும் வகையில் சண்டை, சச்சரவு என பல நாட்கள் ஒன்றாக இருந்தது போல பார்வையாளர்களுக்கு அனுபவத்தை கொடுத்துள்ளது.
சல்மான் கான்
இந்நிலையில் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரியளவில் பிரபலமான நிகழ்ச்சியாக திகழ்ந்து வருகிறது. அனைத்து மொழி பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கு முன்னோடியாக 15 சீசன்களை கடந்து 16-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இதற்கிடையே அனைத்து ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தவர் சல்மான் கான். 16-வது சீசனையும் சல்மான் கான் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறாராம்.
இதனால் தற்போது அவருக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை பாலிவுட்டின் பிரபல இயக்குநர் & தயாரிப்பாளர் கரண் ஜோஹர் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர்களை ஏமாற்றிய தளபதி விஜய்! இந்த ஒரு அப்டேட்-ம் கிடையாதா