பிக் பாஸில் வந்துட்டா சினிமா வாய்ப்பு எல்லாம் வராது: டைட்டில் வின்னரே இப்படி சொல்கிறாரே
பிக் பாஸ்
விஜய் டிவியில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் ஷோ. அதில் கலந்துகொண்டாலே பெரிய அளவிக் பிரபலம் ஆகிவிடலாம் என்பதால் அந்த ஷோவுக்கு வர அதிகம் பேர் போட்டியிருகின்றனர். ஆடிஷன் வைத்து தான் தற்போது போட்டியாளர்களை தேர்வு செய்கின்றனர்.
இந்நிலையில் பிக் பாஸில் ஜெயித்துவிட்டால் சினிமாவில் வாய்ப்பு எல்லாம் வராது என டைட்டில் வின்னரே பேசி இருக்கிறார்.

ஆரவ்
பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக வந்த ஆரவ் தான் இப்படி பேசி இருக்கிறார். ஒரு படவிழாவில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சொன்ன அவர் ‘பிக்பாஸ் சென்றுவிட்டால் பட வாய்ப்பு எல்லாம் வராது” என கூறி இருக்கிறார்.
சின்ன திரையில் ஜெயிப்பது வேறு, சினிமா வேறு.. இதில் ஒரு பிஸ்னஸ் இருக்கிறது. ஒருவரை வைத்து படம் எடுக்கவேண்டும் என்றால் அவருக்கு என்ன பிஸ்னஸ் இருக்கிறது என முதலில் பார்ப்பார்கள். அதனால் பட வாய்ப்பு வர அதற்க்கான நேரத்தை எடுத்துக்கொள்ளும் என தெரிவித்து இருக்கிறார்.

ராஷ்மிகாவை விட நானே நல்லா நடிச்சிருப்பேன்: தாக்கி பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்