நடிகர் ஆரவ்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஆரவ். இந்த நிகழ்ச்சிக்கு பின் மார்க்கெட் ராஜா மற்றும் ராஜபீமா போன்ற படங்களில் நடித்து வந்தார்.
மேலும் கடந்த ஆண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்து வெளிவந்த கலகத்தலைவன் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.
இதை தொடர்ந்து தற்போது மீண்டு மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆரவ் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
தந்தையான ஆரவ்
நடிகர் ஆரவ் கடந்த 2020ஆம் ஆண்டு நடிகை Raahei என்பவரை திருமணம் செய்துகொண்டார். நடிகை Raahei இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஷ்வா இமை போல் காக்க படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், ஆரவ் - Raahei ஜோடிக்கு நேற்று அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. அதை மகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தையும் ஆரவ் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த பதிவு..