பிக் பாஸ் கோப்பையுடன் தனது வாழ்க்கையில் முக்கியமானவரை சந்தித்த அர்ச்சனா.. புகைப்படத்துடன் இதோ
அர்ச்சனா
சின்னத்திரையில் ராஜா ராணி 2 சீரியல் மூலம் அறிமுகமான அர்ச்சனா, பிக் பாஸ் 7 டைட்டில் வென்றார். இவருடைய வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
மக்களிடம் இருந்து 16 லட்சம் வாக்குகளை பெற்று பிக் பாஸ் வரலாற்றில் சாதனை படைத்தார். மேலும் வைல்டு கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து, டைட்டில் வென்ற முதல் போட்டியாளராகவும் பார்க்கப்படுகிறார் அர்ச்சனா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியை தனது குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடிய அர்ச்சனா, தற்போது தனது வாழ்க்கையில் மிகமுக்கியமான ஒருவரை கோப்பையுடன் சந்தித்துள்ளார்.
முக்கியமானவரை சந்தித்த அர்ச்சனா
அவர் வேறு யாருமில்லை அர்ச்சனாவுக்கு ராஜா ராணி 2 சீரியல் வாய்ப்பை கொடுத்த சின்னத்திரை இயக்குனர் பிரவீன் பென்னெட் தான். ஆம், அர்ச்சனா தனது குருவாக நினைக்கும் இயக்குனர் பிரவீன் பென்னெட்-ஐ சந்தித்து அவர் கையில் தனது பிக் பாஸ் கோப்பையை கொடுத்துள்ளார்.
உங்களுடைய வழிகாட்டுதல் இந்த வெற்றிக்கு மிகமுக்கிய காரணம் என்றும் என்றென்றும் உங்களுடைய மாணவி நான் என கூறி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அர்ச்சனா பதிவு செய்துள்ளார்.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
