தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகும் பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ்..
பிக்பாஸ்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம்தோறும் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்.
ஐந்து சீசன்ங்களை கடந்து வெற்றிகரமாக 6-வது சீசனில் அடியெடுத்து வைக்க இருக்கிறது பிக்பாஸ். அதன்படி பிக்பாஸ் சீசன் 6 உடைய ப்ரோமோக்கள் எல்லாம் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்று இருக்கிறது.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். அந்த சீசனில் மக்களிடம் ஆதரவை பெற்ற அவர் டைட்டில் ரன்னராகவும் மாறினார்.
பாலாஜி முருகதாஸ்
இதற்கிடையே தற்போது பாலாஜி முருகதாஸ் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இது குறித்து அவரே தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அந்த வகையில் படத்தின் பெயர் மார்கெண்டேயனும் மகளிர் கல்லூரியும் என வைக்கப்பட்டு இருப்பதாகவும், படத்தை லிப்ரா ப்ரோடக்ஷன்ஸ் சார்ப்பில் ரவீந்தரன் தயாரிப்பதாகவும் அறிவித்துள்ளார் பாலாஜி முருகதாஸ்.
3 நாள் முடிவில் பொன்னியின் செல்வன் மொத்தமாக செய்த வசூல்